Rekha nair : சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு வந்தவர்கள் ஏராளம் அந்த வகையில் ரேகா நாயர் முதலில் வம்சம், ஆண்டாள் அழகர், பகல் நிலவு, நாம் இருவர் நமக்கு இருவர், பூவே உனக்காக, பைரவி போன்ற சீரியல்களில் நடிப்பு திறமையை காட்டி ரசிகர்களை உருவாக்கினார்.
இப்படி ஓடிக்கொண்டிருந்த ரேகா நாயர் 2022 ஆம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்த இரவின் நிழல் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் ரேகாநாயர் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் இளம் வயதில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. பிளஸ் டூ முடிச்சு காலேஜுக்கு போகும்போது எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு. அப்போ எனக்கு வயசு 17 தான் அந்த திருமணம் சீக்கிரம் விவாகரத்தில் முடிந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன்.
தெரியாத வயசுலையே அந்த முதல் திருமணம் நடந்து விட்டது என்னுடைய குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டதால் நான் காதலித்து திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை நானும் ரொம்ப கஷ்டப்பட்டு பேப்பர் போட்டு தான் வளர்ந்தேன் அந்த சமயத்தில் என்னுடைய பெற்றோரை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் மனதில் இருந்தது என் அப்பாவும் அம்மாவும் யாரை கல்யாணம் பண்ண சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாம் என்ற மனநிலை வந்ததற்கு காரணம் என்னவென்றால்..
இரண்டு பவுன் நகை கூட வாங்கி கல்யாணம் பண்ண வைக்கும் சூழ்நிலை இல்லை எங்களுக்கு ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தாலும் அதன் மூலம் தான் ஏதோ வருமானம் வருகிறது என்பதால் எந்த மாப்பிள்ளை இருந்தாலும் சரின்னு சொல்லி முதல் திருமணம் செய்து கொண்டேன். 18 வயசுல எனக்கு குழந்தை பிறந்தது என் மகள் பிறக்கும்போது என்னுடைய கணவர் என்னுடன் இல்லை..
நான் கோயம்புத்தூரில் காலேஜ் படிக்கும் பொழுது குழந்தை பிறந்ததால் கேரளாவில் உள்ள என் பெற்றோருக்கு லெட்டர் மூலம் செய்தி அனுப்பினேன் அந்த சமயத்தில் போன் வசதி இல்லாத லெட்டர் போட்டேன் அப்புறம்தான் அவங்க வந்து குழந்தையை கூட்டிட்டு போனாங்க குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டும் என்று ஒரு அறிவு கூட எனக்கு அந்த நேரத்தில் இல்லை..
17 வயசுல எனக்கு கல்யாணம் ஆச்சு இன்னைக்கு 37 வயசு ஆகுது இந்த 20 வருஷத்துல என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை பார்த்தேன் ஒரு வீடு வாங்கிட்டேன் இரண்டு கார் வச்சிருக்கேன் முடியாது ஒன்னு இல்ல எல்லாமே சாத்தியமாகும்.. தான் சந்தித்த கஷ்டத்திலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை கூறியுள்ளார்.