தளபதி விஜய்க்கு சமீபத்தில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகியது இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி விஜய் தன்னுடைய 65 படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு பல இயக்குனர்கள் போட்டி போட்டு நிலையில் இந்த திரைப்படத்தை இயக்க நெல்சன் டிலிப்குமர் கமிட்டானார். அதேபோல் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கஇருக்கிறது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் தளபதி 65 திரைப்படத்தைப் பற்றிய செய்திகள் வருகிறதோ இல்லையோ தளபதி 66 திரைப்படத்தின் செய்திகள் தினம் தினம் வந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தளபதி 65 திரைப்படம் கோலமாவு கோகிலா மற்றும் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை இயக்கியுள்ளா நெல்சன் டிலிப்குமர் தான் தளபதி 65 திரைப்படத்தை இயக்குகிறார்.
இதற்காக இயக்குனர் ரஷ்யாவில் லொக்கேஷன் வேட்டையில் இறங்கி விட்டார் சமீபத்தில்தான் அதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை யார் தயாரிக்கப் போகிறார் என்ற போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே விஜய் திரைப்படத்தை தயாரித்து நஷ்டமடைந்த ஒரு சில நிறுவனங்கள் களத்தில் இறங்கியுள்ளன.
எப்படியாவது சிறிய பட்ஜெட் திரைப்படத்தை எடுத்து பெரிய அளவு லாபம் ஈட்டுவிடவேண்டும் தங்களுடைய நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டும் என குறிக்கோளுடன் இறங்கிவிட்டார்கள் பல தயாரிப்பாளர்கள். அந்தவகையில் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிய பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் விஜயிடம் கால்சீட் கேட்டு தினமும் விஜயை தொந்தரவு செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
விஜய்-அட்லி இணைந்த பிகில் திரைப்படம் முதலில் 150 கோடி பட்ஜெட்டில் உருவாக இருந்தது ஆனால் அட்லியின் கவனக்குறைவால் 180 கோடி வரை தாண்டியது. பிகில் திரைப்படம் 300 கோடி வசூல் செய்தாலும் ஒரு சில கோடிகள் மட்டுமே தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபமாக இருந்தது.
அதனால் தற்பொழுது விஜயை வைத்து சிறிய பட்ஜெட் திரைப்படத்தை எடுத்து பெரிய அளவில் லாபம் பார்க்க முடிவு செய்து விட்டார்கள் அதனால் தளபதி 66 திரைப்படத்திற்கு கால்சீட் கேட்டு வருகிறார்கள் இந்த நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் மட்டுமல்லாமல் மெர்சல் திரைப்படத்தை தயாரித்த ஸ்ரீதேனாண்டாள் நிறுவனமும் அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது. அதனால் தற்போது விஜய் மிகவும் தர்ம சங்கடத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தளபதி 66 திரைப்படத்தை யாருக்கு தயாரிக்கும் உரிமையை கொடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.