சினிமா உலகில் ஒவ்வொருவரும் ஒரு கனவோடு கால்தடம் பதிக்கின்றனர் ஆனால் அவர்கள் சினிமா உலகில் நுழைந்த பிறகு அது எல்லாமே மாறிப் போய் விடுகிறது சொல்லப்போனால் பலர் ஹீரோவாக வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர் ஆனால் அவர்களெல்லாம் இயக்குனராக மாறிவிடுகின்றனர்.
இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில் வலம் வந்தவர்கள் ஹீரோவாக மாறி விடுகின்றனர். சினிமா உலகம் பலரை மாற்றி உள்ளது. விஷால், சித்தார்த், கார்த்தி போன்றவர்கள் உதவி இயக்குனராக வேலையை பார்த்துவிட்டு பின் திடீரென நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹீரோவாக மாறி வெற்றிகண்டு வருகின்றனர்.
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் கூட நடிகராக வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தார் ஆனால் அவர் இயக்குனராக மாறிவிட்டார் இப்படி பல நடந்துள்ளது. இப்படி தமிழ் சினிமா உலகில் இயக்குனராக வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமா உலகில் நுழைந்தார் அருண் காமராஜ் பின் திடீரென காமெடி ஹீரோவாக களம் இறங்கி வெற்றி கண்டார்.
அதன்பின் பாடல்களை எழுதிய அதிலும் வெற்றி கண்டார் குறிப்பாக ரஜினியின் கபாலி படத்தின் பாடலை எழுதி அசத்தினார் இப்படி இயக்குனராக வரவேண்டும் என்ற ஆசையில் வந்த அருண்ராஜா பலவற்றில் தனது ஆர்வம் காட்டினார் இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனை சந்தித்து உள்ளார் ஆனால் சிவகார்த்திகேயனோ நீ ரஜினி சார் வரைக்கும் பாட்டு எழுதி இருக்க படத்தில் நடித்திருக்க..
“எதுக்கு நீ இங்க வந்து அந்த வேலையை போய் பாரு” என சிவகார்த்திகேயன் கூறிய பின் தனது இயக்குனர் வேலையை பார்க்க ஆரம்பித்தேன். ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், சிவகார்த்திகேயனை வைத்து கனா எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார் இப்பொழுது கூட இவர் ஆர்டிகள் 15 என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். சிவா அவ்வாறு சொன்ன பிறகே நான் சினிமா உலகில் இயக்குனர் வேலையை பார்க்க ஆரம்பித்தேன் என கூறினார்.