விருமாண்டி படத்தில் நடிக்க விஜயகாந்தை ஃபாலோ பண்ணினேன் – நடிகை அபிராமி பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

abirami-
abirami-

உலகநாயகன் கமலஹாசன் சினிமா உலகில் பல்வேறு விதமான கெட்டப்புகளில் தனது திறமையை காட்டி வெற்றி மேல் வெற்றியை சம்பாதித்தவர். கடைசியாக கூட இவர் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் கைகோர்த்து விக்ரம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

மேலும் வசூல் ரீதியாக சுமார் 400 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்தது இதனை தொடர்ந்து நடிகர் கமல் சபாஷ் நாயுடு, இந்தியன் 2, தேவர்மகன் 2 என அடுத்தடுத்த புதிய படங்களில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் கமலஹாசன் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் விருமாண்டி.

இந்த படத்தில் கமல் சண்டியர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் அவருடன் கைகோர்த்து பசுபதி, நெப்போலியன் உள்பட மற்றும் பல பிரபலங்கள் நடித்திருப்பார் கமலுக்கு ஜோடியாக நடிகை அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் அவர் ஒரு மதுரை ஸ்லாங்கில் பேச வேண்டும். என்பற்காக நடிகர் கமல் என்ன சொன்னார் என்பதை சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை அபிராமி வெளிப்படையாக பேசி உள்ளார்.

இந்தப் படத்தில் நான் தான் நடிப்பது என முடிவானதும் கமல் என்னிடம் நீ மதுரை தமிழில் பேச வேண்டும் என கூறினார் மேலும் விஜயகாந்த் எப்படி பேசுவாரோ அதை நன்றாக கவனித்து அதுபோல பேசு என தெரிவித்தார் நானும் விஜயகாந்த் சார் நடித்த சில படங்களை பார்த்து அவர் எப்படி பேசுகிறார் .

என்பதை உள்வாங்கி அதுபோலவே பேசினேன் என அபிராமி பேட்டியில் தெரிவித்தார். நடிகை அபிராமி விருமாண்டி திரை படத்தில் நடிக்கும் பொழுது அவருக்கு வயது 20 என்பது குறிப்பிடத்தக்கது. அப்பொழுதே விருமாண்டி திரைப்படத்தில் தனது முழு திறமையை காட்டி டாப் நடிகர்களுக்கு நிகராக படத்தில் நடித்து அசத்தியிருப்பார் நடிகை அபிராமி.