தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல கதைகளம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவரது நம்பர் 1 இடத்தை பிடிக்க பல நடிகைகள் ஆசைப்பட்டாலும் தனது விடா முயற்சியின் காரணமாக சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக தொடர்ந்து பயணித்து வருகிறார் நயன்தாரா.
இப்படி இருக்கின்ற நிலையில் இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் கடந்த 7 வருடங்களாக காதலித்து வருகின்ற நிலையில் ஜூன் 9ஆம் தேதியன்று மகாபலிபுரம் அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் மிக விமர்சியாக திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களது திருமண விழாவில் சினிமா பிரபலங்கள் ஆன ரஜினி, கார்த்தி, சூர்யா, அட்லி, அனிருத், ஷாருக்கான் போன்ற பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் இவர்களது திருமணம் மிக பாரம்பரிய முறையில் நடைபெற்றது எனவும் பலரும் குறிப்பிட்டிருந்தனர். அந்த வகையில் ஜூன் 9 திருமணம் முடிந்ததை அடுத்து நேற்று திருப்பதி கோவிலுக்கு சென்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் செய்து திரும்பினர்.
இன்று விக்னேஷ் சிவன் செய்தியாளர்களை சந்திக்கிறேன் என்று சொல்லியதை அடுத்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசிய விக்னேஷ் சிவன் நான் முதல் முதலில் நயன்தாராவிடம் கதை சொல்ல இந்த ஹோட்டலில்தான் அவரை சந்தித்தேன் .
அதனால்தான் இந்த ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பை வைத்தேன் மேலும் பேசிய நயன்தாரா இதுவரை எங்கள் இருவருக்கும் தனித்தனியாக ஆதரவு கொடுத்தீர்கள் இப்பொழுது திருமணமாகிவிட்டது எங்கள் இருவருக்கும் சேர்ந்து தொடர்ந்து ஆதரவு கொடுங்கள் என பேசியுள்ளார்.