ஜெயிலர் படத்தின் வெற்றியை “ரஜினி” கட்டிப்பிடிக்கும் போது உணர்ந்துவிட்டேன் – நெல்சன் கல கல பேச்சு

Rajini
Rajini

Nelson Dilipkumar : ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி இதுவரை சுமார் 550 கோடிக்கு மேல் வசூல் அள்ளி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் நெல்சன் திலீப்குமார் பேட்டி ஒன்றில் இந்த படத்தின் ரஜினி மற்றும் படம் குறித்து பேசி உள்ளார்.

சோசியல் மீடியாவில் ஒரு படம் ரசிகர்கள் கொண்டாடுவது, திட்டுவது எல்லாம் அவர்களுடைய என்டர்டைன்மென்ட்.. நாம அதை மண்டைக்குள்ள போட்டுக் கொண்டால் நம்ம வேலை பார்க்க முடியாது ஓரளவுக்கு தான் வெற்றியாக இருந்தாலும் தோல்வியாக இருந்தாலும் சரி எடுத்துக் கொள்வேன்.

அடுத்து என்ன செய்யணும்னு மட்டும் தான் நினைச்சு நகர்ந்து செல்வேன். முதல் நாள் அன்று எடுத்த காட்சியை கடைசியாக படத்தில் வைக்க முடியவில்லை எடிட்டிங்ளில் தூக்கி விட்டோம் என்றார் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளே நுழைந்ததும்..

என்னை அப்படியே கட்டிப்பிடிச்சாரு ஏதோ லேசா ஹக் பண்ணிட்டு விட்டுவிடுவார் என்று தான் நினைச்சேன் செம டைட்டாக ஹக் பண்ணிட்டாரு என் பேலன்ஸ் போயிடுச்சு அப்பதான் தோணுச்சு. நம்ம எடுத்த படம் ரஜினி சார் மனசுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நிச்சயம் வெற்றி பெறும் என நினைத்துவிட்டார் என்கின்ற கான்பிடன்ஸ்  அப்பதான் வந்துச்சு என்றாரு நெல்சன் ப்ளேலிஸ்டில் என்ன பாட்டு இருக்கும் என்ற கேள்விக்கு..

எனக்கு இளையராஜா பாட்டு பிடிக்கும், ஏ ஆர் ரகுமான் சார் பாட்டு பிடிக்கும் நான் பாட்டு எப்படி கேட்டேன் என்றால் வரிசையாக ஒவ்வொரு பாடலாக கேட்க மாட்டேன் ஒரு பாடலை லூப் மோடில் போட்டு ஒரு நாள் முழுவதும் எல்லாம் கேட்டு கொண்டிருப்பேன் என் பக்கத்துல யாருன்னாவது வந்தா ஆகா ஆரம்பிச்சிட்டான் என்று ஓடிவிடுவார்கள்.

தால் படத்தின் அந்த பாடலை அப்படித்தான் கேட்டுக் கொண்டிருப்பேன் வர்மன் கேன் பற்றி ஸ்கிரிப்ட் எழுதும்போது இந்த பாட்டு கரெக்டா இருக்கணும்னு நினைச்சு வச்சேன்.  அது சரியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு பலரும் இப்போ அந்த பாட்டுக்கு ஆட்டம் போடுறாங்க அது ரொம்ப ஹாப்பியா இருக்கு என பேசி உள்ளார்.