17 வயதில் காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் பிறகு அவருக்கு நான் 4வது மனைவி என தெரிய வந்தது.! அப்பொழுதே உடைந்து விட்டேன் என தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகத்தை கூறிய பேபி அஞ்சு.!

baby-anju
baby-anju

தென்னிந்திய சினிமாவில் 80,90 காலகட்டத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்த நடிகை பேபி அஞ்சு தன்னுடைய திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மன வேதனைகளை சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ள இவருடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தன்னுடைய இரண்டு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமான இவர் 1979ஆம் ஆண்டு வெளிவந்த உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

மேலும் இதற்கு முன்பு தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார் ஆனால் கதாநாயகிக்கு பிறகு சில திரைப்படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் கதாநாயகியாக நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை பிறகு தமிழினை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழிகளிலும் நடித்து வந்துள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் பேபிஅஞ்சு  கன்னட நடிகர் டைகர் பிரபாகரரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு திருமணமான ஒரு வருடத்திலேயே விவாகரத்து ஆகிவிட்டது. மேலும் இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகன் இருக்கிறார் இவர் சமீபத்தில் தொலைக்காட்சி பெட்டியில் ஒன்றில் கலந்துக் கொண்ட பொழுது சமீப காலங்களாக சில திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அதில் தன்னுடைய திருமண வாழ்க்கையை குறித்து பேசும் பொழுது டைகர் பிரபாகரன் வயதில் என்னை விட பெரிய அவர் சொல்லப்போனால் அவர் என் அப்பாவை விட பெரியவர் என கூறலாம் இதன் காரணமாகவே என்னை பலரும் திட்டினார்கள் என் மீது கோபப்பட்டார்கள் நான் தமிழில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது கன்னடத்தில் அவர் மிக பிரபலமான நடிகராக இருந்தார்.

அப்பொழுது அவருடைய படத்தின் நடிக்கும் பொழுது அவரைப் பற்றி பயங்கரமாக புகழ்வார்கள் அப்போது எனக்கு வெறும் 17 வயது தான். எப்படியோ நான் அவருடைய காதல் வளையல் சிக்கிக்கொண்டேன் அதனை திருமணம் என சொல்ல முடியாது ஒரு ஒன்றரை வருடம் மட்டுமே நான் அவருடன் இருந்தேன் அவ்வளவுதான் அவளுக்கு அவருக்கு ஒரு மகள் இருந்தது எனக்கு தெரியும்.

அதாவது திருமணம் முடித்துவிட்டு அவருடைய வீட்டிற்கு போன பிறகுதான் தெரிகிறது அங்கு என்னை விட அதிகமான வயதில் இரண்டு பிள்ளைகள் அவருக்கு இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் கல்லூரி படித்துக் கொண்டிருந்தார்கள் எனக்கு அப்பொழுது என்ன சொல்வது என்று தெரியாமல் இருந்தேன் அது குறித்து பிரபாகரனிடம் கேட்டால் ஆமாம் அவர்கள் என்னுடைய பிள்ளைகள் என்று சொன்னார்.

அப்பயே நான் மனம் உடைந்து விட்டேன் அதன் பிறகு தான் நான் அவருக்கு நான்காவது மனைவி என்பது தெரிய வந்தது. நாம் எடுக்க முடிவு நம் வாழ்க்கையை நாமே தான் தீர்மானித்தோம். இதில் எது வந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என அவருடன் வாழ்ந்தேன். அப்பொழுது நான்கு மாதம் கர்ப்பமாக இருந்தேன் பின் படத்தில் நடிக்கும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பை இருந்தது தெரிய வந்தது.

எனவே எங்களுக்கு அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுவது சண்டை போன்றவற்றை வழக்கமாக இருந்ததால் நான் அவரின் வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்து விட்டேன் அப்பொழுது என் மகன் அர்ஜுன் மூன்று மாத குழந்தை 3 நாட்கள் கழித்து இல்லாமல் என்னால் வாழ முடியாது வா என சொன்னார். ஆனால் நான் கண்டிப்பாக வர முடியாது என கூறிவிட்டேன் என் மகனை உன்னைவிட என்னால் நன்றாக வளர்க்க முடியும் எனக் கூறிவிட்டேன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்த பிரபாகரன் இறந்த தகவல்களை வந்தது அதற்கு கூட நான் போகவில்லை அந்த அளவிற்கு நான் மன வேதனையில் இருந்தேன் என சமீபத்தில் சசிகலா எடுத்த பேட்டியில் கூறியுள்ளார்.