சினிமாவுலகில் இயக்குனராக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக தொடர் வெற்றிப் படங்களில் நடித்து அசத்தியவர் சுந்தர் சி இவர் நடிகை குஷ்புவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது இயக்குனர் சுந்தர். சி.
தமிழ் சினிமா உலகில் இப்போது தொடர்ந்து ஹீரோவாகவும் இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார் இரண்டிலும் தொடர்ந்து வெற்றி கொடி காட்டுவது அவரது ஸ்டைல். இயக்குனராக அண்மைக் காலமாக தொடர்ந்து பேய் படங்கள் மற்றும் திரில்லர் படங்களை எடுத்து வருகிறார். அந்தப் படங்கள் வெற்றி பெறுகின்றன.
குறிப்பாக அரண்மனையின் அடுத்தடுத்த பாகம் தொடர்ந்து வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் குறிப்பாக சுந்தர் சி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தலைநகரம் அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது இந்த படத்தை விஇசட் துரை இயக்குகிறார் சுந்தர்சி நடித்து வருகிறார்.
இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்க மறுபக்கம் சுந்தர்சி கலகலப்பு 2 திரைப்படம் நல்ல வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜீவா, ஜெய் ஆகியோர்களை வைத்து மற்றொரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் இயக்குனர்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.
சில இயக்குனர்களை பார்க்கும்பொழுது வயித்தெரிச்சல்லா இருக்கு.. இன்னும் நம்ப இயக்குனர்கள் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்றத பாத்தா.. வாந்தி வர மாதிரி இருக்கு சினிமாங்கிறது விஷுவல் மீடியம் அதுல இன்னும் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்றாங்க.. கதவ திறந்தா ஹீரோயின் நிப்பா அவ கேட்டா ஐ லவ் யூ சொன்னா ஒத்து பங்களா என மைண்ட் வாய்ஸ் கேட்டுகிட்டே இருக்கு..
அது எல்லாம் பார்க்கும் பொழுது வயித்தெரிச்சல் இயிருக்கும். டைரக்டா காட்ட வக்கீல்லாமல் ஏன் மைண்ட் வாய்ஸ் யூஸ் பண்ணி பண்றாங்கன்னு கேட்கத் தோணுது என இயக்குனர் சுந்தர். சி ஆவேசமாக பேசினார்.