தமிழ் சினிமாவில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து தனது திறமையை வெளிக்கொண்டு வருகிறார் அஜித். கடைசியாக இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த நிலையில் தற்போது வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை இரண்டு வருடங்களுக்கு மேலாக இயக்குனர் ஹச். வினோத் எடுத்து வந்த நிலையில் சமீபத்தில் வெற்றிகரமாக முடித்து அசத்தினார்.
இந்தப் படத்தை தற்போது அஜித்தும் அவரது ரசிகர்களும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்
வலிமை திரைப்படம் முதலில் தீபாவளியை குறி வைத்த நிலையில்அதில் இருந்து திடீரெனப் பின்வாங்கி தற்போது கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பொழுது வெற்றியைக் கொண்டு கொண்டிருந்தாலும் ஆரம்ப காலகட்டத்தில் பல்வேறு தோல்விப் படங்களையும், பல சூப்பர் ஹிட் படங்களையும் தவற விட்டு விட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது இருக்கிறது.
அஜித் ஒரு படத்தில் அவ்வளவு சீக்கிரம் கமிட் ஆகமாட்டார் அப்படி கமிட்டானார் படத்தின் கதையில் மாற்றம் எதுவும் செய்யமாட்டார் இயக்குனர் இடத்திலேயே விட்டுவிடுவார்.
அப்படி தான் இவரது ஆரம்பகால படங்கள் இருந்தன.
ஆனால் அஜித் ஒரே ஒரு படத்தில் மட்டும் நான் நடிக்கவே முடியாது என கூறி வெளிப்படையாக சொல்லி உள்ளார்.
ராஜகுமாரன் இயக்கத்தின் “நீ வருவாய்” என்ற படத்தை எடுத்து இருந்தார்.
இந்த படத்தில் முதலில் ஹீரோ கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க அழைத்தனர். மேலும் கெஸ்ட் ரோல் கதாபாத்திரத்தில் அஜித்தை நடிக்க அழைத்தனர் அவரும் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
விஜய்யின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் இந்த முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் நடிக்காமல் போனது.
பிறகு முழுநேர கதாபாத்திரத்தில் நடிக்க வேற நடிகரை வைத்து கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார். முழுநேர கதாபாத்திரத்தில் அஜித்தை நீங்கள் நடியுங்கள் என படக்குழு அஜித்திடம் கேட்டனர்
விஜய் சார் கெஸ்ட் ரோல் கதா பாத்திரத்தில் நடிக்கிறார் என தெரிவித்தனர். உடனே இந்தப் படத்தில் எனக்கு நடிக்க விருப்பம் இல்லை என உடனடியாக கூறிய அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
நீ வருவாய் என படத்தில் ஹீரோயின் ஹீரோவை நீ வேண்டாம் என வெறுத்து ஒதுக்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கும் அந்த காரணத்தினால்தான் அஜித் முழுநேர கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்டது.
மௌன ராகம் படத்தில் ரேவதி மோகனை பார்த்து வேண்டாம் என வெறுபார். ஆனால் பிறகு கார்த்தியை விரும்புவார். இந்தக் காரணத்தினால் கார்த்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். ஆனால் மோகன் சொல்லிக்கொள்ளும்படி நல்ல வரவேற்பை பெறவில்லை அதுபோல் என்னுடைய கதாபாத்திரமும் வந்து விடும் என்ற காரணத்தினால் நான் இந்த படத்தில் நடிக்கவில்லை என கூறினார்.