நடிகை சாய் பல்லவி இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை சினிமாவில் தொடர்ந்தார். முதல் படம் பிளாக்பஸ்டர் படமாக மாறிய அதையடுத்து நடிகை சாய் பல்லவி மலையாள சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து படவாய்ப்பு கிடைத்தது.
நடிகை சாய் பல்லவி தமிழில் கூட மாரி 2, ngk போன்ற படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் நடிகை சாய் பல்லவி இப்பொழுது பெரிய அளவில் முக்கியத்துவம் உள்ள கதைகளில் எதுவும் வராததால் நடிக்காமல் இருக்கிறார் ஆனால் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்புகள் வருகின்றன.
என்னதான் வாய்ப்புகள் அதிகமாக இருந்தாலும் படத்தின் கதையில் முக்கியத்துவம் இருக்க வேண்டுமே என்பதற்காக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தெலுங்கில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் நாக சைதன்யா, நானி போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து உள்ளார் இப்போது கூட தெலுங்கு இயக்குனர்கள் பலரும் கதையை சொல்லி தனது படங்களில் கமிட் செய்ய விரும்புகின்றனர்.
அந்த வகையில் தமிழில் சூப்பர் ஹிட்டடித்த வேதாளம் திரைப்படம் தெலுங்கில் உருவாகிறது அதில் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்க சாய்பல்லவியை அழைக்கப்பட்டது. ஆனால் நடிகை சாய் பல்லவி அந்த படத்தில் நடிக்க முடியாது என கூறி விட்டார். இது இப்படி இருக்க மறுபக்கம் தெலுங்கு சினிமாவில் மற்றொரு முன்னணி நடிகராக வலம் வரும் மகேஷ் பாபுவுடன் கை கோர்த்து ஒரு படத்தில் அவருக்கு தங்கையாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் என்ற செய்தி.
தற்போது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது ஏன் நீங்கள் சிரஞ்சீவியுடன் நடிக்க மறுத்து விட்டு மகேஷ் பாபு படத்தில் தங்கையாக நடிக்கிறார் என கேட்டனர் அதற்கு நான் தங்கையாக நடிப்பது பிரச்சினையில்லை வலுவாக கதாபாத்திரம் இருக்க வேண்டும் அதன் காரணமாகவே அந்த படத்தில் நடிக்கவில்லை என மறைமுகமாக சொல்லி உள்ளார் சாய் பல்லவி.