தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கு சினிமாவில் அதிகம் முன்னுரிமை கொடுத்து வருகிறார். இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சாணிக் காகிதம் திரைப்படம் ஓடிடியில் நல்ல வரவேற்பு பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மேலும் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். இப்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், என மாறி மாறி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் நிலைமை வந்தால் சினிமாவை விட்டு விலகி வேறொரு வேலை பார்ப்பதாக பகிரங்கமாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் சக நடிகைகள் சினிமாவில் இருக்கும் பாலியல் தொல்லைகள் குறித்து தன்னிடம் நிறையவே பேசி இருக்கிறார்கள்.
ஆனால் இதுவரைக்கும் என்னிடம் வந்து யாருமே தவறாக பேசியது இல்லை. அது மட்டுமல்லாமல் என்னை யாருமே தவறான கண்ணோட்டத்தில் அணுகி பாலியல் தொல்லை கொடுக்கவில்லை அப்படி பாலியல் தொல்லை கொடுத்தால் நான் அந்த வாய்ப்பை உதறி தள்ளிவிட்டு சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்று பகிரங்கமாக பேசி உள்ளார்.
இவர் இப்படி பேசியதை கேட்டு இவருடைய ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கொஞ்சம் அதிர்ச்சியாகியுள்ளார்கள். பொதுவாகவே சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பது சகஜம் ஆனால் அது தனக்கு ஏற்பட்டால் சினிமாவை விட்டு விலகி விடுவேன் என்று கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களுக்கு பல்வேறு விதமாக பாராட்டுகள் வந்துக்கொண்ட்டிருக்கிறது.