இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூரியகுமார் யாதவ் ஐபிஎல் இல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் கடந்த மூன்று போட்டிகளில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார் நேற்றைய போட்டியில் கூட பஞ்சாப் அணியை எதிர்த்து சூரியகுமார் யாதவ் ஆட்டம் மிகவும் பாராட்டும் வகையில் இருந்தது ஆம் வந்த ஆரம்பத்திலேயே பவுண்டரிகளும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டு ரன்கள் ஏற்றினார்.
இதன் மூலம் அவர் அரை சதங்களை அடித்து மும்பை அணியை வெற்றி பெற வைத்தார். வெற்றி பெற்ற பிறகு பேசிய சூரியகுமார் யாதவ் சொன்னது இன்று நாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து மகிழ்ச்சியாக இருந்தாலும் எனக்கு ஒரு குறை இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான்தான் கடைசி வரை பேட்டிங்கில் நின்று சேசிங்கை முடித்திருக்க வேண்டும்.
கடந்த ஆட்டத்திலும் இந்த தவறை தான் செய்து விட்டேன் சேசிங் செய்யும் போது அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று எங்களுக்கு தெரியும் நான் இன்று பெரிதாக எதுவும் விளையாடவில்லை இசான்கிஷன் நன்றாக விளையாடி கொண்டிருந்தார்.
அவருக்கு துணையாக மட்டும்தான் நின்றேன். இதுபோன்ற சூழலுக்காக நான் என்னையே தயார்படுத்திக் கொண்டிருந்தேன். ஒரு ஓவரில் 12 முதல் 14 ரன்கள் அடித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்ற பட்சத்தில் எந்த ஷார்ட்டுகளை ஆடலாம் என்பது குறித்து யோசிப்பேன் இன்றைய ஆட்டத்தில் நானும் கிஷனும்..
எங்களுடைய பணியை மாற்றிக் கொண்டோம் எனக்கு ஈசான் கிசனை போல் பவராக விளையாடி ரன் சேர்க்க தெரியாது. நான் டைமிங்கை நம்பி தான் ஷார்ட் அடிப்பேன் இதைப் போன்று பில்டர்கள் இல்லாத இடத்தை பார்த்து ரன் சேர்ப்பேன் எங்களுடைய பாட்னர்ஷிப் அணியின் வெற்றியை தேடி தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சூரியகுமார் யாதவ் பேசி உள்ளார்.