சினிமாவில் நடிக்கும் ஆசை இப்ப தான் வந்ததா.? நிருபரின் கேள்விக்கு நச்சின்னு பதில் அளித்த அண்ணாச்சி.

the-legand
the-legand

சரவணா ஸ்டோர் ஓனர் சரவணன் அருள் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி லெஜண்ட். இந்தப் படம் வருகின்ற 28ஆம் தேதி கோலாகலமாக உலக அளவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் சரவணன் அருளுடன் கைகோர்த்து ஊர்வசி ரவுத்தேலா, பிரபு, யோகி பாபு, விவேக், மயில்சாமி மற்றும் பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் செண்டிமெண்ட் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது நிச்சயம் இந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்திருக்கும் என தெரிய வருகிறது காரணம் இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளிவந்து மிரட்டும் வகையில் இருந்தது மேலும் ரசிகர்களும் படத்தை பெரிய அளவில் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தி லெஜண்ட் திரைப்படம் தமிழை தாண்டி ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இதனால் முதல் இரண்டு நாட்களில் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை தி லெஜண்ட்  திரைப்படம் அள்ளும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தி லெஜன்ட் படக்குழு பிரஸ் மீட்டை வைத்தது.

அப்பொழுது பேசிய சரவணன் அருள் படம் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் நீங்கள் ஏன் இந்த வயதில் நடிக்க வந்தீர்கள் என கேட்டுள்ளனர் அதற்கு அவர் கூறிய பதில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய சின்ன வயதில் இருந்து ஆசை ஆனால் அதை அடைய சினிமாவுக்கு வெளியே பெரிய அளவில் வியாபாரத்தில் உழைக்க வேண்டியதாக இருந்தது.

வியாபாரத்தில் ஒரு இடத்தை பிடித்த பிறகு எனது கனவை நோக்கி நகர்ந்தேன். சினிமா என்பது கலைதான் என்றாலும் அது ஒரு பெரிய வணிகம் அந்த வணிகத்தில் கூட தன்னை சரியாக நிலை நிறுத்திக் கொள்ள பெரிய திட்டமிடலும் கமர்சியல் கதையும் தேவை அது இப்பொழுது தான் கிடைத்தது என நச்சு பதில் கொடுத்தார்.