“வேட்டையாடு விளையாடு” படத்தில் எனக்கு எமோஷனல் சீன்ல கண்ணு தண்ணியே வரல.. உண்மையை உடைக்கும் நடிகை ஜோதிகா.!

jothika
jothika

இயக்குனர் கௌதம் மேனன் எப்பொழுதும் ஆக்சன் மற்றும் காதல் சம்பந்தப்பட்ட படங்களை இயக்குவதில் ரொம்பவும் கைதேர்ந்தவர். இவரது படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் எப்பொழுதும் செம்ம அழகாக இருப்பார்கள் அந்த வகையில் பல வெற்றி படங்களை கொடுத்து பல நடிகர் நடிகைகளை சினிமாவில் உயர்த்தி உள்ளார்.

குறிப்பாக சூர்யா, ஜோதிகா, சிம்பு, மாதவன் போன்ற பல நடிகர்களை வளர்த்து விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பொழுது கூட கௌதம் வாசுதேவ் மேனன் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு என்னும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டுள்ளார் படம் வெகு விரைவிலேயே வெளிவர இருக்கிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஜோதிகா அண்மையில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் வேட்டையாடு விளையாடு படம் குறித்தும் பேட்டி ஒன்றில் பேசி உள்ளார். வேட்டையாடு விளையாடு படம் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் இந்த படத்தில் ஏர்போர்ட்டில் கமலுக்கும் எனக்கும் ஒரு ப்ரொபஷனல் சீன் காட்சி எடுக்கப்பட்டது.

இந்த காட்சி ஏர்போட்டில் அதிகாலை 3 மணிக்கு ஷூட்டிங் எடுக்கப்பட்டது ஏனென்றால் ஏர்போர்ட்டில் 3 மணிக்கு தான் ஷூட்டிங் அனுமதி அதனால் அப்பொழுது படமாக எடுக்கப்பட்டது இந்த காட்சியில் எனக்கு அழ வேண்டும் ஆனால் மூணு மணிக்கு எனக்கு கண்ணீர் வரவில்லை..

அதற்கான காரணம் கல்யாணத்திற்கு முன்பு என்னால் எமோஷனல் சீன்களில் அழுவதற்கு கண்ணீரே வராது ஆனால் திருமணம் செய்த பிறகு அம்மாவான எனக்கு ஏகப்பட்ட பொறுப்புகள் வந்த பின் எமோஷனல் செண்டிமெண்ட் குழந்தைகள் என எதுவாக இருந்தாலும் எனக்கு உடனே கண்ணீர் வந்துவிடும் என வெளிப்படையாக கூறியுள்ளார்.