தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய் இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்கள் தான் அந்த வரிசையில் தற்பொழுது தனது 66-வது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படத்திற்கு வாரிசு என பெயர் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார்.
தில் ராஜு பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார் இந்த படத்தின் இரண்டு கட்டப்படும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் மூன்றாவது கட்டப்படிப்பு விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த படம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஒரு கேமியோ ரோலிலும் விஜய் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் விஜய் பற்றிய செய்தி ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என பல கதாபாத்திரங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகர் நெப்போலியன் இவர் விஜய் படத்தை பார்ப்பதும் கிடையாது அவரைப் பற்றிய பேசுவதும் கிடையாது என கூறி வருகிறார். இவர் அவ்வாறு சொல்ல காரணம் என்னவென்று பார்த்தால் விஜயும், நெப்போலினும் போக்கிரி படத்தில் சேர்ந்து நடித்த நேரம் அப்பொழுது நடிகர்கள் எல்லோருக்கும் கேரவன் இருக்கும் அப்படி நடிகர் விஜய் கேரவனில் ஓய்வெடுக்க போயிருந்தார்.
அந்த சமயம் நடிகர் நெப்போலியன் தனது அமெரிக்க நண்பர்களை அழைத்துக் கொண்டு விஜய்யை பார்க்க அவரது கேரவன் இருக்கும் இடத்திற்கு போய் கதவைத் திறக்க முயற்சித்து உள்ளார் வெளியில் நின்று கொண்டிருந்த பணியால் உள்ளே போகக்கூடாது என வாக்குவாதம் பண்ணினார் சத்தத்தை கேட்டு தளபதி விஜய் வெளியே வந்து நடிகர் நெப்போலியனை பார்த்து அதான் பணியால் சொல்லுகிறாரே பார்க்க முடியாது என்றால் பார்க்க முடியாது தான்..
ஏன் தொந்தரவு செய்கிறீர்கள் என நெப்போலியன் பார்த்து கேட்டாராம் நண்பர்கள் முன்னாடி ரொம்ப அசிங்கமாக போனதாம் பின் அமைதியாக நெப்போலியனும் அவரது நண்பர்களும் அங்கே இருந்து கிளம்பிவிட்டனராம் அன்றிலிருந்து விஜய் பற்றி பேச மாட்டாராம் அவரு படத்தையும் பார்க்க மாட்டாராம் மேலும் அவரது நண்பர்கள் கூட விஜய் பத்தி பேசினால் நெப்போலியன் ரொம்ப கோபப்பட்டு விடுவாராம்.