தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு தற்போது தாதா படத்தில் நான் நடிக்கவே இல்லை பிறகு ஏன் என் மூஞ்சியை வைத்து பப்ளிசிட்டி பண்றீங்க என்று நடிகர் யோகி பாபு தற்போது கேள்வி எழுப்பியுள்ளார்.
தற்போது தமிழ் சினிமாவில் உருவாகும் எந்த திரைப்படமாக இருந்தாலும் சரி அதில் யோகி பாபு இல்லாத படமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அந்த அளவிற்கு பிரபலமாகி உள்ள யோகி பாபு தற்போது 20 படங்களுக்கு மேல் கையில் வைத்திருக்கிறார். ஆனால் நடிகர் யோகி பாபு அவபோது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். மேலும் நடிகர் யோகி பாபு ஒரு சில திரைப்படங்களில் கேமியோ ரோலில் மட்டும் நடித்திருப்பார் ஆனால் அந்தப் படக் குழுவினர் யோகி பாபுவின் புகைப்படத்தை வைத்து புரொமோட் செய்து விடுவார்கள்.
ஆனால் அவர் கேமியோ ரோலில் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் அவரை வைத்து பிரமோட் செய்தால் அந்த பட குழுவினர் மீது எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில் தாதா என்கிற படகுழு யோகி பாபுவின் போஸ்டரை பயன்படுத்தி ப்ரமோட் செய்ததால் யோகி பாபு டென்ஷனாகி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் நான் தாதா படத்தில் நடிக்கவே இல்லை ஏன் என் மூஞ்சை வைத்து புரமோட் செய்கிறீர்கள் என்று பட குழுவை சரமாரியாக கேள்வி கேட்டு இருக்கிறார் அது மட்டும் அல்லாமல் தாதா படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு கூட யோகி பாபு வர மறுத்திருக்கிறாராம். இவருடைய இந்த செயலை கண்டித்து தாதா படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் பேசியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் யோகி பாபு மீது நடவடிக்கை எடுக்க கோரி தாதா படத்தின் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளனர். யோகி பாபு தங்களை படத்தை வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கிறார் அவரைத் தொடர்ந்து படங்களில் நடிக்க தடை விதிக்க கோரியும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இதனால் இந்த விவகாரம் தற்போது பூகம்பகமாக வெடித்திருக்கிறது.