இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்ற அதிக முனைப்புடன் இருந்து வருகிறது ஆனால் முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் நடந்தது அதில் இந்திய அணி மிகப் பெரிய அளவில் ஜொலிக்க வில்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான் ஏனென்றால் தொடக்கத்திலேயே தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறியது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இந்திய அணி ஒரு கட்டத்தில் சுமார் 151 ரன்கள் குவித்தது இதை எடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரரான ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் சிறந்த பங்களிப்பை கொடுத்து இருவரும் அரைசதம் அடித்தனர். மேலும் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 17 ஓவர்களில் மொத்த ரன்களையும் அடித்து வெற்றியை பெற்றனர்.
வெற்றி பெற்ற சந்தோஷத்தில் பாக்கிஸ்தான் அணி இருக்கிறது இந்த வெற்றி குறித்து பேசிய சாஹீன் ஆப்ரிடி கூறுகையில் : இந்தியாவுடனான போட்டியில் எனது பங்களிப்பு சிறப்பாக இருந்ததற்கு சந்தோஷம்.நான் சிறப்பாக செயல்பட சில திட்டங்களை வகுத்தோம். எல்லாம் புதிய பந்தில் ஸ்விங் செய்தால் போதும் தொடக்க பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் எனக்கு நன்றாகவே தெரியும்.
போட்டி முன் பயிற்சியில் கூட நான் புதிய பந்தில் ஸ்விங் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தேன் அதுபோல எதிர்பார்த்து புதிய பந்தில் ஸ்விங் செய்து விக்கெட்டுகளை எடுத்தேன் என கூறினார். உண்மையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் நான் இல்லை.
இரண்டாவது இன்னிங்சில் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியவர்கள் தான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியை நிலைநாட்டினார் அவர்களே இந்த வெற்றிக்கு தகுதியானவர்கள் என பாராட்டினார் சாஹீன் ஆப்ரிடி.