தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாகவும்,ஹீரோயினாகவும் நடித்து அசத்தியவர் சரண்யா மோகன். இவர் சினிமாவையும் தாண்டி நடனம் ஆடுவதிலையும் கெட்டிக்காரர் என்பது குறிப்பிடதக்கது. ஏன் அண்மையில் கூட நடிகை சரண்யா நடிகர் சிம்புவுக்கு நடனமும் கற்றுக் கொடுத்த புகைப்படம், வீடியோ ஆகியவை இணையதள பக்கத்தில் வெளியது என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா உலகில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் அண்மையில் கூட இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின அதனை உறுதிப்படுத்தும் வகையில் அவர் பேசியது:
நான் குழந்தைப் பருவத்திலேயே சினிமா உலகில் நடிக்க தொடங்கி விட்டேன் சினிமாவை முழுவதுமாக ஒரு கட்டத்தில் மறந்துவிட்டு படிப்பில் கவனம் செலுத்தினேன் இருப்பினும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் ஒரு கனவு படத்தில் நடிக்க என் குருநாதர் கேட்டுக்கொண்டார் அவர் சொல்லை மீற வேண்டாம் என்பதற்காக அந்த திரைப்படத்தில் நடிதேன் பின் வாய்ப்புகள் குவிய தொடங்கியது.
அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான யாரடி நீ மோகினி என்ற திரைப்படத்தில் நடித்தேன் ஆரம்பத்தில் யாரடி நீ மோகினி படத்தோட புரோடக்சன் டிம் என்னிடம் நடிக்க பேசினார்கள். அப்பொழுது எனக்கு படத்தில் நடிக்க விருப்பமில்லை எவ்வளவு சொல்லியும் பார்த்தேன் ஆனால் அவர்கள் சும்மா ஸ்கிரீன் டெஸ்ட்டுக்கு வாங்க என்று சொன்னார்கள்.
நிறைய பெண்கள் காத்திருந்தார்கள் அதை பார்த்தவுடன் எனக்கு வாய்ப்பு கிடைக்காது என சந்தோஷப்பட்டு போனேன் ஆனால் என்னை அந்த படத்தில் நயன்தாரா அக்காவுக்கு தங்கச்சியாக நடிக்க உறுதி செய்து விட்டார்கள் பின் அன்பு கட்டளையால் அந்தப் படத்தில் வேறு வழியின்றி நடித்தேன்.
யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் டூயட் பாடல் ஆடியது எனக்கு மிகப்பெரிய ஆச்சரியம். ஏனென்றால் இதுவரை எனக்கு எந்த ஒரு படத்திலும் அமையவில்லை அது யாரடி நீ மோகினி படத்தில் அமைந்ததாக கூறினார்.
மேலும் தனுஷ் சார் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ற சீன் எல்லாம் வேற லெவல். யாரடி நீ மோகினி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருந்தது ஒரு பக்கம் காலேஜ் படிப்பு, நடிப்பு என இரண்டையும் பேலன்ஸ் பண்ணி கொண்டு இருந்தேன்.
என்னுடைய கணவர் அரவிந்த் கிருஷ்ணன் ஒரு பல் மருத்துவர் எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் பிஸியாக இருந்தேன் இதனால் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது ஆனால் இப்போது சினிமாவில் நடிக்க எங்கள் குடும்பத்தில் இருந்து பாசிட்டிவான தகவல்கள் வெளிவந்த வண்ணமே இருக்கிறது வெகுவிரைவிலேயே சினிமாவில் நடிக்க வருவேன் என கூறினார்