சின்னத்திரை, வெள்ளித்திரை என இரண்டிலும் பயணித்தவர் நடிகை வனிதா. வெள்ளி திரையில் நடிகர் விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது பின் ஒரு கட்டத்தில் உடல் எடையை சற்று ஏற்றியதால் ஒருகட்டத்தில் ஹீரோயின் என்ற வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.
இருப்பினும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் அவ்வப்போது தலைகாட்டி வந்தார் இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் ஒரு சமயத்தில் சுத்தமாக மீடியா பக்கமே செல்லாமல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாராம் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு அசத்தினார்.
அதனைத் தொடர்ந்து நடிகை வனிதா அவ்வப்போது படங்களில் தலைகாட்டி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென பிக்பாஸ் அல்டிமேட் என்கின்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இது 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் மாற்ற போட்டியாளர்களுடன் வனிதா விஜயகுமாருக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு ஏற்பட்டு கொண்டிருந்ததன் காரணமாக திடீரென பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து விலகினார் மேலும் இவரது உடல்நிலை, மனநிலை சரியில்லை என கூறப்படுகிறது.
ஆனால் ரசிகர்களோ.. வனிதா விஜயகுமார் கமலஹாசன் போவதை தெரிந்துகொண்டு ரம்யா கிருஷ்ணன் வந்து விட்டால் தனக்கு குடைச்சல் கொடுப்பார்கள் என நினைத்து தான் வனிதா விஜயகுமார் விலகியதாக ரசிகர்கள் சமூக வலைதளப் பக்கங்களில் பேசி வந்தனர் வெளியே வந்த வனிதா விஜயகுமார் நான் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
ரம்யா கிருஷ்ணன் வருவதன் காரணமாக நான் விலகவில்லை இந்த பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என்னுடைய உடல்நிலை, மனநிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய நிலையை புரிந்து கொண்டு அதற்கு உதவியாக hotstar நிறுவனத்திற்கும் பிக்பாஸ் அல்டிமேட் தயாரிப்பு நிறுவனத்திற்கு நன்றி என கூறினார்.