மறைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜியை எனக்கு தெரியாது எனக் கூரிய வனிதா.! கொந்தளித்த ரசிகர்கள்.

vadivel-balaji-1
vadivel-balaji-1

vanitha said about vadivel balaji; சினிமா உலகில் பல காமெடி நடிகர்கள் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்களை மகிழ்விப்பது வழக்கம் அதுபோல சின்னத்திரையிலும் பல திறமையான காமெடி நடிகர்கள் தற்போது பிரபலமடைந்து மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து கொண்டு வருகின்றனர் அப்படி பல ஆண்டுகளாக மக்களைத் தனது திறமையின் மூலம் வகித்து வந்தவர் தான் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி.

இவர் சமீப காலமாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் தங்க கொண்டிருந்த நிலையில் திடீரென நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார் இச்செய்தியை சின்னத்திரையும் தாண்டி வெள்ளி துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இச்செய்தியை முன்னணி பிரபலங்களான ரோபோ ஷங்கர், விஜய் சேதுபதி, ஆர்த்தி, இராமர், மகேஷ், தாடி பாலாஜி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபகாலமாக சர்ச்சையில் சிக்கி வரும் வனிதா அவர்கள் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த செய்திக்கு அறிந்து டேக் ஒன்றை போட்டுள்ளார் எனக்கு அவர் யார் என்று தெரியாது, இதுவரையும் நான் பார்த்ததும் இல்லை அவர் மிகவும் திறமையானவர் என்பதை கேள்விப்பட்டு இருக்கிறேன் இந்த சூழலில் சிக்கித் தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என டுவிட் செய்துள்ளார்.

இந்த ட்விட்டை பார்த்த ரசிகர்கள் பலரும் நீங்கள் சின்னத்திரையில் சமீபகாலமாக பயணித்து வருகிறார்கள் உங்களுக்கு எப்படி பிரபலமடைந்த வடிவேல் பாலாஜி தெரியாமல் இருக்கும் அதுவும் இவரும் விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார் உங்களுக்கு எப்படி தெரியாம இருக்கும் என கூறி அவரை ஒரு பக்கம் திட்டியும் வருகின்றனர்.