தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. ஆள் பார்ப்பதற்கு வெள்ளை வெளேரென வெளிநாட்டு ஹீரோயின் போல இருந்ததால் இவருக்கு வாய்ப்புகள் ஆரம்பத்திலேயே தென்னிந்திய சினிமா உலகில் குவிந்தன.
குறிப்பாக தமிழில் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். குறிப்பாக அஜித் விஜய் தனுஷ் சிம்பு போன்ற நடிகர்களுடன் நடித்து தனது திறமையையும் அழகையும் காட்டி அசத்தினார் இதனால் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று வந்தார்.
அண்மைகாலமாக இவர் தமிழில் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கில் அதிகப்படியான வாய்ப்புகள் குவிந்து வருகின்றன மறுபக்கம் வெப்சீரிஸ் பக்கத்திலும் தலை காட்டி நடித்து வருகிறார் இதனால் நாளுக்கு நாள் நடிகை தமன்னாவின் மார்க்கெட் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
சினிமா உலகில் தனது அழகையும் திறமையையும் காட்டி இருந்தாலும் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை கவர்ந்து இழுக்க தொடர்ந்து சமூக வலைதளப் பக்கங்களில் ஆடையின் அளவு குறைந்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா விஜய் யார் என்றே தெரியாது என கூறி உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.
நடிகை தமன்னா சுறா படத்தில் விஜயுடன் கைகோர்த்து நடித்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் அவர் சுறா படத்தில் இணைவதற்கு முன்பாக விஜய் என்றால் யார் என்றே எனக்கு தெரியாது என பேட்டி ஒன்றில் சொல்லி உள்ளார் நடிகை தமன்னா.