படத்தின் கதைக்கு ஏற்றவாறு நான் ஹீரோக்களை தேர்வு செய்வதில்லை விழா மேடையில் பேசிய ராஜமௌலி – வியப்பில் சினிமா பிரபலங்கள்.

rajamouli
rajamouli

தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் குறைந்த திரைப்படங்களை இயக்கி இருந்தாலும் உடனே முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார் காரணம் அவரது திரைப்படங்கள் இதுவரை எந்த ஒரு படத்தின் சாயல் உடன் இருக்காது மேலும் அவரது திரைப்படங்கள் படத்தின் பட்ஜெட்டை விட பல கோடி அள்ளி அதனால் அந்த பேரையும், புகழையும் ஒரு சில படங்களிலேயே சம்பாதித்து விட்டார்.

மேலும் தெலுங்கு தாண்டி இந்திய அளவில் இவரது பெயர் பறந்து கொண்டிருக்கிறது. பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது ஜூனியர் என்டிஆர், ராம்சரண் ஐ வைத்து RRR என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து அஜய்தேவ்கன், ஆலியா பட் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது இந்த நிலையில் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது சென்னை அண்ணா நகரில் நடந்த வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது இதில் படத்தில் நடித்த முக்கிய பிரபலங்கள் பணியாற்றியவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிருபர்களை சந்தித்து பேசிய ராஜமௌலி நான் நான்கு வருடங்கள் கழித்து உங்களை சந்திக்கிறேன் சினிமாவை மற்றும் பற்றி பேசுங்கள் என கூறினார் சென்னை வரும் பொழுது பள்ளி மாணவனாக உணருகிறேன் சென்னை எனக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தது. ஏன் ஹாலிவுட் நடிகர்களை படம் எடுக்க வேண்டும்.

நம் நடிகர்கள் மிகவும் திறமையானவர்கள் தான் நம் நடிகர்களை வைத்து ஹாலிவுட் படம் எடுப்போம் என கூறினார் மேலும் தமிழில் யாராக இருந்தாலும் என் கதை யாரை ஹீரோவாக தேர்ந்தெடுக்கிறது அவரை வைத்து இயக்குவேன் என கூறினார். இவரை தொடர்ந்து ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் கள் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.