தமிழ் சினிமாவில் மலையாள திரையுலகின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் நரேன் இவர் மலையாளத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான் ஆனால் மிஸ்கின் இவரை சித்திரம் பேசுதடி வாயிலாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகப் படுத்தி விட்டார்.
தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது என்று தான் கூற வேண்டும் அந்த வகையில் பார்த்தால் இவர் தமிழில் பள்ளிக்கூடம்,முகமூடி,அஞ்சாதே போன்ற பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் அதைவிட லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான கைதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கி விட்டார்.
ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து விக்ரம் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் கேங்ஸ்டர் திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கவுள்ளதாக சமீபகாலமாகவே தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்நிலையில் நரேன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் 40 ஆண்டுகள் கழித்து நான் இப்படித்தான் இருப்பேன் என ஒரு புதிய கெட்டப்புடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து அந்தப் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார் ஆனால் இந்த புகைப்படத்தை க்ளிக்கியது லோகேஷ் கனகராஜ் என பதிவிட ரசிகர்கள் பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
கிட்டதட்ட நரேன் விக்ரம் திரைப்படத்தில் நடிக்கும் கெட்டப் இதுதான் எனவும் ரசிகர்கள் உறுதிப்படுத்தும் வகையில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பலரும் இணையத்தில் வைரலாக்கி வருவது மட்டுமல்லாமல் இதுதான் விக்ரம் திரைப்படத்தில் நரேன் நடிக்கும் கதாபாத்திரம் என கூறுகிறார்கள்.