பிக்பாஸ் கோபத்துல பண்ணிட்டேன் இத மட்டும் நாளைக்கு டெலிகாஸ்ட் பண்ணாதீங்க.. கேமரா முன்பு கதறிய அசீம்

azeem
azeem

விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி வருடம் தோறும் ஒளிபரப்பாகி வருகிறது இதன் ஆறாவது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது இதனை கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார் இந்த சீசனின் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அதில் 7 போட்டியாளர்கள் வெளியேறி தற்போது 14 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.

சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.  ஒவ்வொரு வாரமும் புது புது வித்தியாசமான டாஸ்குகள் நடை பெற்று வருகிறது அதில் இந்த வாரம் ஏலியன்கள் மற்றும் பழங்குடியினர் என பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

இரு அணிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வருகிறது அதில் கடந்த எபிசோடில் அமுதவாணன் மற்றும் அசீம் இருவருக்கும் பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது. சண்டையில் அசீம் கை அமுதவாணன் கழுத்தில் பட்டுள்ளது அதற்கு அமுதவாணன் நீ என்னை அடிக்கிறாயா என்று கோபப்பட்டு உள்ளார் உடனே அசீமும் என்னை அடி அடித்து பார் என கோபமாக பேசி உள்ளார்.

இந்த சண்டை வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பின்பு அசீம் அவரது தப்பை உணர்ந்து சிறிது நேரம் கழித்து அமுதவாணனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கேமரா முன் நின்று இன்று நடந்த சண்டை ஒரு கோபத்தில் நடந்து விட்டது. நான் என் தப்பை உணர்ந்து கொண்டேன்.

பிக் பாஸ் இந்த சண்டையை மட்டும் நீங்கள் ஒளிபரப்ப வேண்டாம் இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அந்த சண்டை ஒளிபரப்பானால் அது பெரிய விஷயமாக மாறிவிடும் எனது பெயர் ரொம்ப டேமேஜ் ஆகிவிடும் என பிக் பாஸ் இடம் அசீம் கேட்டுக்கொண்டார் அசீம் பேசிய இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.