மார்க் ஆண்டனி வெற்றியை அஜித்திற்கு சமர்ப்பிக்கிறேன்.! சக்சஸ் மீட்டில் இயக்குனர் பேச்சு

Ajith
Ajith

Mark Antony Sucess meet : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர்  இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ். ஜே. சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க்க ஆண்டனி படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் எங்கும் கோலாகலமாக வெளியானது இந்த படத்தை எதிர்த்து ஜவான் மற்றும் சில படங்கள் வெளியாகி..

இருந்தாலும் அதனை எல்லாம் பீட் பண்ணி தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தொடர்ந்து வசூல் பேட்டை நடத்தி வருகிறது ஏற்கனவே 50 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இதுவரை மட்டுமே உலகம் எங்கும் 77 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெகு விரைவிலேயே 100 கோடியை தொட்ட புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது அதில் விஷால், எஸ் ஜே சூர்யா, நிழல்கள் ரவி, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என பலர் கலந்து கொண்டனர் அப்பொழுது மேடை ஏறிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியது என்னவென்றால்..

படத்தில் நடித்த நடிகர், நடிகைகளை பற்றி பேசினார் அதன் பிறகு மார்க் ஆண்டனி  படத்தின் வெற்றியை நான் அஜித் சாருக்கு சமர்ப்பிக்கிறேன்.. நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது படபிடிப்பில் அவரை சந்தித்த பிறகு எனது மனநிலை மாறிவிட்டது உன்னால முடியும் நீ போய் பெரிய படம் பண்ணு என நம்பிக்கை அளித்தது அவர் தான்.

Ajith
Ajith

அதனாலையே மார்க் ஆண்டனி போன்ற பெரிய  படம் என்னால் எடுக்க முடிந்தது என நெகிழ்ச்சியாக பேசினார் இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இளம் தலைமுறை நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் ஊக்கத்தை கொடுத்து அவர்களை தூக்கிவிடும் அஜித் அவர்கள் பாலாண்டுகள் வாழ வேண்டும் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.