கிரிக்கெட் என்றவுடன் நமக்கு முதலில் தோன்றுபவர் சச்சின் டெண்டுல்கர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே இந்திய கிரிக்கெட் அணிக்காக 24 வருடங்களாக உழைத்தவர் சச்சின் டெண்டுல்கர் இவர் 1983-ம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரையிலும் 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 35 ஆயிரம் சர்வதேச ரன்களை குவித்துள்ளார் அதுபோல டெஸ்டிலும் 10,000 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் மும்பையிலுள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடைசியாக விளையாண்டார் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாண்டார் சச்சின் டெண்டுல்கர். போட்டி முடிந்த பின்பு உரையாற்றிய சச்சின் சோகம் கலந்த சந்தோஷத்தில் பேசிக்கொண்டிருந்தார் இந்த உரை மிகவும் புகழ்பெற்றதாகும் இந்த உரையை கேட்ட கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கினார் அதிலும் குறிப்பாக எதிர் அணி வீரர்காளான வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் கண்கலங்கினார்.
இந்த நிகழ்வை குறித்து தற்பொழுது வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் எட்வர்ட்ஸ் அவர்கள் சச்சினை பற்றி சமீபத்தில் கூறியுள்ளார் அவர் கடைசியாக விளையாடிய போட்டியில் நானும் அவருடன் சேர்ந்து விளையாடிக்கொண்டு இருந்தேன் அது ஒரு உணர்ச்சிகரமான தருணம்.அவர் கடைசியாக உரையாடும் போது நானும் என் பக்கத்தில் கிரீஸ் கெயிலும் இருந்தார் எங்களால் எங்களது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை முடிந்தவரை அடக்கிக்கொண்டு அந்த தருணம் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது.
இந்த மனிதனை இனிமேல் கிரிக்கெட் மைதானத்தில் பார்க்க முடியாது என்ற வருத்தம் எங்களுக்குள் தோன்றி கொண்டது ஒருமுறை இங்கிலாந்து சுற்றுப்பயணம் நான் சென்று இருந்தேன்.அப்போது சரியாக விளையாடாமல் தட்டுத்தடுமாறி கொண்டுறிந்த போது ஒரு குறுஞ்செய்தி ஒன்று என்னிடம் வந்து சேர்ந்தது கிரிக்கெட் உலகில் கடுமையான சோதனைகள் வருவது மிகவும் சகஜம் தளர்ந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று என்னை ஊக்குவித்தவர் அந்த மனிதன் தான் என கலங்கியவாறு கூறினார் எட்வர்ட்ஸ்.