என்னால முடியல.. கேரவனுக்குள் கதறி அழுத சிம்பு.! அதிர்ச்சியான சினிமா பிரபலம்

simbu
simbu

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி பின் வளர்ந்து ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்தவர் சிம்பு.  இப்படி ஓடியே இவருக்கு ஒரு சில திரைப்படங்கள் தோல்வி படங்களாக மாறியதை அடுத்து சினிமா உலகில் சில காலங்கள் நடிக்காமல் உடல் எடையை ஏற்றி காணப்பட்டார் இதனால் சிம்புவின் சினிமா கேரியர் கிளோஸ் என பலரும் சொல்லி..

வந்த நிலையில் அதிரடியாக உடல் எடையை குறைத்து இரண்டாவது இன்னிங்கிஸ் விளையாட ஆரம்பித்திலிருந்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை ருசித்தன இதனைத் தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் கமிட் ஆகிய நடித்தும் வருகிறார் இதனால் சிம்புவின் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

இப்படிப்பட்ட நடிகர் சிம்பு குறித்து ஒரு தகவல் இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது. 2019 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் வந்தா ராஜாவாக தான் வருவேன் படத்தில் நடித்தார். இந்த படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து மேகா ஆகாஷ், கேத்தரின் தெரசா, ரோபோ சங்கர், பிரபு, ரம்யா கிருஷ்ணன், விடிவி கணேஷ், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர்  நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது நடிகர் சிம்பு கேரவனுக்கு சென்று அழுதுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. சிம்பு இந்த படத்தில் நடிக்கும் பொழுது உடல் எடை ஏற்றி தான் நடித்துக் கொண்டிருந்தார் இந்த படத்தில் ஒரு நடன காட்சியில் தனது பருமனான உடலை வைத்துக்கொண்டு சிம்புவால் நடனம் ஆட முடியவில்லை.

உடனே கொஞ்சம் ஓய்வு எடுத்துவிட்டு வருவதாக கூறி கேரவனுக்கு சென்று உள்ளே அழுது கொண்டு இருந்தாராம் அப்பொழுது கேரவனுக்குள் நுழைந்த டான்ஸ் மாஸ்டர் சிம்புவை பார்த்து ஏன் அழுறீங்க என கேட்க அதற்கு சிம்பு என்னால் முன்பு போல் நடனம் ஆட முடியவில்லை நான் அதிகமாக வெயிட் போட்டு விட்டேன் ஆதலால் டான்ஸ் ஸ்டெப்களை கொஞ்சம் எளிமையாக்குங்கள் என கூறினாராம்.

simbu
simbu

அதற்கு டான்ஸ் மாஸ்டரும் சரி என ஒப்புக்கொண்டார் சில நிமிடங்கள் கழித்து சிம்பு டான்ஸ் மாஸ்டர் அழைத்து நீங்கள் டான்ஸ் ஸ்டெப்களை மாற்ற வேண்டாம் எனக்கு ஒரு மணி நேரம் டைம் தாருங்கள் அதன் பிறகு வந்து ஆடுகிறேன் எனக் கூறிவிட்டு கேரளாவிற்குள் தீவிரமாக பயிற்சி எடுத்தாராம் அதன் பின் ஒரு மணி நேரம் கழித்து  பாடல் காட்சிகளில் சூப்பராக நடனம் ஆடியிருந்தார் சிம்பு.