சினிமா உலகில் ஹீரோ ஹீரோயின் எப்படியோ அதேபோல காமெடிகளும் படத்திற்கு வலு சேர்க்கின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடியில் கலக்கிய செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக் ஆகியோர் வரிசையில் சூரியின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ஓடுவதால் காமெடி நடிகர் சூரியன் மார்க்கெட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
இப்பொழுது கூட நடிகர் சூரிக்கு தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் தனது காமெடி திறமையை வெளிக்காட்டி நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி சூப்பராக ஓடுகிறார் மேலும் ஹீரோவாகவும் தற்பொழுது ஓரிரு திரைப்படங்களில் தலைகாட்டி நடித்து அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை படத்தில் சிக்ஸ் பேக் வைத்து எல்லாம் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விருமன் இந்த படத்திலும் வழக்கம் போல செம காமெடியாக நடித்துள்ளார் சூரி.
ஆனால் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளார் சூரி அது குறித்து ஒரு தகவல் கிடைத்துள்ளது. விருமன் படத்தின் மூலம் சினிமா உலகில் என்ட்ரி ஆகி உள்ளவர் அதிதி சங்கர் இவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை அதிதி சங்கர் தனது மொக்க ஜோக்கால் படகுழுவை காண்டாகி உள்ளார்
ஒரு கட்டத்தில் கடி ஜோக்கை தாங்க முடியாத நடிகர் சூரி, தயவுசெய்து ஷூட்டிங்கை ரத்து செய்து விடுங்கள் நான் என் சொந்த ஊருக்கே போய்விடுகிறேன் என நகைச்சுவையாக கூறியதாக அந்த படத்தில் நடித்த ரோபோ ஷங்கரின் மகள் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்தார். இச்செய்தி இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.