லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பல வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஒரு வழியாக கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி அனைவரது முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். திருப்பதி, கேரளா போன்ற இடங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஒரு வழியாக சின்னதாக ஒரு ஹனிமூனுக்காக தாய்லாந்து கூட போயிட்டு வந்தனர்
தற்போது தொடர்ந்து நயன்தாரா கையில் படங்கள் இருப்பதால் அதை விரைவிலேயே முடிக்க நடித்து வருகிறார் முதலாவதாக அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா பின்னாடியே சுற்றித்திரிந்து வருகிறார்
அண்மையில் கூட பாலிவுட் நடிகை மாளவிகா அரோரா என்பவருடன் விக்கி நயன்தாரா ஆகியோர் இருவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தற்போது நயன்தாராவை சந்திக்க வேண்டும் என்றால் முதலில் விக்னேஷ் சிவன் அனுமதி பெற்ற பிறகு தான் நயன்தாராவை சந்திக்க முடியுமாம் அந்த அளவிற்கு நயன்தாரா பின்னாடியே ஓடிக்கொண்டிருக்கிறாராம்.
இப்படி இருந்த நிலையில் தற்போது நயன்தாராவை விட்டு விலக முடிவெடுத்துள்ளார் விக்கி. இது தற்பொழுது நயன்தாரா ரசிகர்களை சோகம் அடைய வைத்துள்ளது ஏனென்றால் நயன்தாரா ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும் விக்னேஷ் சிவனுக்கு என தற்போது பெரிய பட்ஜெட் படங்கள் வருகின்றன
இந்த சமயத்தில் நயன்தாராவுடன் சுற்றி இருந்தால் நம்மளுடைய சினிமா பீல்டு அடி வாங்கி விடும் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு தற்பொழுது அஜித் படத்திற்கான வேலைகளில் இறங்கியுள்ளாராம். நயன்தாராவும் விட்டு பிடிக்கலாம் என இருந்து வருகிறார் மேலும் நயன்தாராவுக்கும் தற்போது தொடர்ந்து படங்கள் இருப்பதால் அதில் சற்று கவனம் செலுத்தி வருகிறார்.