90 காலகட்டங்களில் பல வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஓடியவர் தேவயானி. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து திரை உலகில் வெற்றி நடிகையாக வந்த இவர் இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்காததால் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இனியா மற்றும் பிரியங்கா என இரு குழந்தைகள் இருகின்றனர் இப்பொழுது தேவயானி பெரிய அளவு வெள்ளித்திரையில் காணப்படவில்லை என்றாலும் சின்னத்திரையில் வந்த வாய்ப்புகளில் தலைகாட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்.
இப்படிப்பட்ட நடிகை தேவயானி அஜித் குறித்தும், காதல் கோட்டை படம் குறித்தும் பேசி உள்ளது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.. நான் சினிமாவில் நிறைய தோல்வி படங்களில் நடித்தது துவண்டு போயிருந்த சமயம் அது இதோடு சினிமா வாழ்க்கையே மூட்டை கட்டிவிடலாம் என நினைத்து விட்டேன் அப்பொழுதுதான் “காதல் கோட்டை” படத்தில் நடிக்க அழைப்பு வந்தது.
பின்னர் இந்த ஒரு படத்தில் நடித்து என்ன ரிசல்ட் வருது என பார்க்கலாம் என நினைத்தேன் அதற்காக கடுமையாக உழைத்தேன் நிறைய நேரங்களில் தூக்கம் கூட வராமல் பயத்துடன் இருந்துள்ளேன் இந்த படத்தில் பெரும்பாலும் பார்க்காமலே காதல் என்பதால் அஜித்திற்கும் எனக்கும் பெரிய சந்திப்பு இருந்ததில்லை..
இதனால் நான் என்னுடைய பங்கை சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணி நடித்தேன். அதன் பிறகு அந்த படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக கொண்டாடப்பட்டது எனவே அஜித்தின் காதல் கோட்டை தான் தன் சினிமா பயணத்தை தீர்மானித்தது அதன் பிறகு மலமலவென வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது என அவர் கூறினார்.