சினிமா உலகில் அண்மை காலமாக உண்மை மற்றும் நாவல்களை மையமாக வைத்து பல திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன அந்த வகையில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்து வெற்றி பெற்றது.
இந்த திரைப்படத்தில் பல நட்சத்திர நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர் அவர்களில் ஒருவராக இந்த படத்தில் லால் நடித்திருந்தார். இவர் பெரிதும் விக்ரம் மற்றும் விக்ரம் பிரபு உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த காட்சிகள் அனைத்தும் ஹைதராபாத்தில் எடுக்கப்பட்டன. சூட்டிங் எடுத்த சமயத்தில் ஹைதராபாத்தில் செம்ம வெப்பம் இருந்ததால்..
ரொம்ப கஷ்டப்பட்டு எப்படியோ லால் நடித்துவிட்டார். இந்த படத்தில் வெயிலை பார்க்காமல் நடித்த லால்.. இதற்கு முன்பாக லால் நடித்த ஒரு படத்தின் இறுதி காட்சியில் வெப்பம் தாங்க முடியாமல் படப்பிடிப்பு தளத்தை விட்டு ஓடி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அந்தப் படம் வேறு எதும் அல்ல விக்ரம் பிரபு மற்றும் லால் இணைந்து நடித்த படம் டாணாகாரன் தான்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கும் அனுபவத்தை நேரடியாக எடுத்துக்காட்டி இருந்தனர். இந்த படத்தில் லால் கடுமையான போலீஸ் அதிகாரியாக ஈஸ்வர மூர்த்தி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் இறுதி சூட்டிங் வேலூரில் தொடங்கப்பட்டது.
அப்பொழுது தொடர்ச்சியாக 52 நாள் வெயிலில் நடந்ததாம் கடைசி நாள் ஷூட்டிங்கில் என்னால் எல்லாம் நடிக்க வர முடியாது என்ன வெயில் முடியலை என லால் அந்த இடத்தினை விட்டு கிளப்பிவிட்டாராம் இதை விக்ரம் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.