என்னால் பொறுமை காக்க முடியவில்லை “வலிமை” படத்தை பார்க்க தவிக்கும் தமிழ் நடிகர்.! யார் அது தெரியுமா.?

valimai
valimai

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி கோலாகலமாக வெளியாகிறது ஒருபக்கம் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க செம வெயிட்டிங்கில் இருக்கின்றனர் காரணம் இரண்டு வருடங்கள் கழித்து வர இருக்கிறது. இதுவரை வெளிவந்த அப்டேட்கள் அனைத்தும் செம்மையாக இருந்ததால் ரசிகர்கள் படத்தைப் பார்க்க ரெடியாக இருக்கின்றனர்.

அதேசமயம் பொங்கல் அன்று வெளிவர வேண்டிய படம் அது வெளியிட முடியாமல் போனது. அதனால் இந்த தடவை படக்குழுவும் முனைப்புக் காட்டி வருகின்ற 24ம் தேதி வெளியாக இருப்பதால் ரசிகர்கள் பேனர்களை அடித்து ஓடுகின்றனர் மேலும் வலிமை படத்தின் முன்பதிவுகள் ஜோராக ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் அமெரிக்காவில் முன்பதிவு சிறப்பாக போய்  வருவதாக தகவல்கள் வெளிவருகின்றன மறுபக்கம் தயாரிப்பாளர் போனி கபூர் படத்தின் ப்ரோமோ ஒவ்வொன்றாக ரிலீஸ் செய்து வருகிறார் இதுவரை 4,5 ப்ரோமோக்கள் வெளிவந்து மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளது.

வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து கார்த்திகேயா, ஹுமா குரேஷி, யோகி பாபு, புகழ் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள உள்ளனர். ஒவ்வொரும் நடிகரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் வியக்க வைக்கும் வகையில் இருந்து வருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் புரோமோ மற்றும் டிரைலர் ஆகியவற்றைப் பார்த்த..

நடிகர் அருண்விஜய் வலிமை திரைப்படத்தை பார்க்க என்னால் வெயிட் செய்ய முடியவில்லை என கூறி ஒரு புதிய பதிவு ஒன்றை போட்டுள்ளார். அஜித்தின் புகைப்படத்தை போட்டு இவ்வாறு அவர் இந்த பதிவை போட்டு உள்ளது தற்போது அஜித் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது.