தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தமிழ் சினிமா உலகில் பிடித்து விட்டால் அந்த நடிகை அந்த இடத்தை விடாமலே இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் நயன்தாரா தமிழில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்துவிட்டு பின்பு ரசிகர்களிடையே உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வருகிறார்.
இவர் தமிழில் நம்பர்-1 நடிகையாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வருகிறார் இவர் ஹிந்தி திரைப்படங்களில் ஒருநாளும் நடிக்க ஒப்பு கொண்டதே கிடையாது என்றுதான் கூறவேண்டும்.
ஏனென்றால் ஹிந்தியில் பல நடிகைகள் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறார்கள் அங்கு இவர் போட்டி போட்டாள் தனக்கு கிடைத்த இடத்தில் தான் இருக்க முடியும் இதனாலேயே இவர் தமிழில் மட்டும் நடித்து வருகிறார் என்று தான் கூற வேண்டும்.
இவரைப்போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா இவர் ஒரு தயாரிப்பாளரிடம் நீங்கள் எனக்கு எத்தனை கோடிதந்தாலும் நான் பாலிவுட் திரைப்படத்தில் நடிக்கவே மாட்டேன் என்று அந்த தயாரிப்பாளரை அனுப்பிவிட்டாராம்.
அதுமட்டுமல்லாமல் இவரது நடிப்பில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு வெளியான யூ டர்ன் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என ஒரு தயாரிப்பாளர் சமந்தாவிடம் கேட்டிருக்கிறாராம்.
அதற்கு சமந்தா நான் சம்மதிக்க முடியாது என கூறி அந்த தயாரிப்பாளரை அனுப்பி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது மேலும் தகவல் தற்போது சமந்தா ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.