Vijayakanth : நடிகர்கள் திரை உலகில் வெற்றி கொடுப்பதை விட நேர்மையாக இருந்து மக்களுக்கு உதவி செய்தாலே போதும் ரசிகர்களும் சரி மக்களும் சரி காலங்கள் கடந்த பிறகும் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள். அதற்கு உதாரணம் எம்ஜிஆர் சொல்லலாம் அவர் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தாலும்..
முதலமைச்சராக ஆன பிறகு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார் அதனாலயே காலங்கள் கடந்த பிறகும் அவரைப் பற்றி பேசுகிறோம் அதே போல் தான் கேப்டன் விஜயகாந்த்தும் சினிமாவின் மூலம் பேரையும், புகழையும் சம்பாதித்தாலும் அதை தான் மட்டும் வைத்துக் கொள்ளாமல் தன்னை சுற்றி இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் காசு, சாப்பாடு என கொடுத்து அழகு பார்த்தார்.
சினிமாவை விட்டு வெளியே வந்த பிறகும் அவருடைய ரசிகர்கள் அப்படியே விஜயகாந்துக்கு இருந்தனர். அரசியலில் தொடர்ந்து வெற்றி கண்டு மேலே மேலே உயர்ந்து கொண்டே போனார். மேலும் வெற்றியை காணுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தினார்.
இவருடைய இறப்பு செய்தியை கேட்டு தொண்டர்கள், ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் அரசியல்வாதிகள் என பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த் இறந்தாலும் அவருடைய புகழ் இன்று வரை ஓயவில்லை தொடர்ந்து அவரைப் பற்றிய பேச்சுகள் வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் அப்பா மறைவிற்குப் பிறகு ஒரு பதிவு ஒன்றை போட்டுள்ளார் அவர் சொன்னது என்னவென்றால்.. இரங்கல் தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் லட்ச கணக்கானோர் எனது தந்தை இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

என்ன மாதிரியான அன்பு எனது தந்தை இங்கு விட்டு சென்றார் என்பதை காட்டுகிறது. அப்பா என்ன மாதிரியான வாழ்க்கை வாழ்ந்தார் எதை சம்பாதித்தார் என்பதை இந்த இறுதி ஊர்வலம் வெளிப்படுத்துகிறது பேரிழப்பை நாங்கள் எதிர்கொண்டுள்ள சூழலில் உங்கள் அனைவரின் ஆதரவு எங்களுக்கு ஆறுதல் என்று கூறியுள்ளார்.