தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி இவர் அங்காடித்தெரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இதில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதால் தொடர்ந்து எங்கேயும் எப்போதும்,மங்காத்தா,கலகலப்பு,சேட்டை, இறைவி, பலுன் உட்பட இன்னும் ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாயிப்பு கிடைத்தது.
அஞ்சலி பொதுவாக குடும்பப்பாங்கான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவ்வாறு குண்டாக இருந்து வந்த இவர் தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
ரசிகர்களும் நீங்கள் சிஸ்லிம்மாக இருந்தால் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அஞ்சலில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் படத்திற்கு ஏற்றாற்போல் கெட்டப்பை மாற்றி கொண்டே இருப்பது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நான் ஆரம்பத்தில் மிகவும் குண்டாக இருந்தேன். இப்பொழுது உடல் எடையை குறைத்துள்ளேன். என்னுடைய ரசிகர்கள் நீங்கள் சிஸ்லிம்மாக இருந்தால் அழகாக இருக்கிறீர்கள் என்று பாராட்டி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அதிசயம் எப்படி நடந்தது என்றும் கேட்கின்றனர்.முதலில் நான் தமிழ் பெண் போன்ற பல படங்களில் நடித்து வந்ததால் அதற்கு ஏற்றார்போல் உடல் எடை மற்றும் தோற்றம் இரண்டையும் மெயின்டன் செய்து வந்தேன்.
இந்நிலையில் தற்பொழுது நான் நிசப்தம் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருவதால் கணிசமான உடல் எடை இருக்க வேண்டும் என்று பட இயக்குனர் கூறினார். எனவே தற்போது கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தேன். இவ்வாறு ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு கெட்டப்பில் மாறிக்கொண்டே இருப்பதால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
தற்பொழுது ரசிகர்கள் நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்லாதவர்கள் கிடையாது. எனவே ரசிகர்களுக்காக என் உடல் எடையை எப்பொழுதும் இப்படியே வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இது நிசப்தம் படம் எனக்கு தந்த மிகப்பெரிய பரிசு என்று அஞ்சலி கூறியுள்ளார்.