vijay : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வரும் விஜய் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து அசத்தி வருகிறார் அந்த வகையில் வாரிசு படத்தை தொடர்ந்து லோகேஷ் உடன் கைகோர்த்து லியோ திரைப்படத்தில் நடித்துள்ளார் படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி கோலாகலமாக திரையில் வெளிவர இருக்கிறது.
அதனை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 608 திரைப்படத்திலும் நடிக்க விஜய் சைன் பண்ணி உள்ளார் என கூறப்படுகிறது இப்படி ஓடிக் கொண்டிருக்கும் விஜய் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்.
படப்பிடிப்பு நேரங்கள் போக மீதி நேரங்களில் தனது ரசிகர்கள் மற்றும் மக்கள் இயக்கத்தில் உள்ள முக்கிய பொறுப்பாளர்களை அழைத்து தொடர்ந்து பேசி வருகிறார்கள். இவர் அரசியல் வந்தால் பலர் ஆதரிக்கவும் எதிர்க்கவும் இருக்கின்றனர். இந்த நிலையில் விஜய் உடன் பல படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்த பிரகாஷ்ராஜ்..
விஜயின் அரசியல் வருகை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் அவர் சொன்னது.. விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதில் எந்த தயக்கமும் இல்லை ஆனால் அரசியலுக்கு வந்தால் அவரிடம் நிறைய கேள்வி கேட்பேன். எம்ஜிஆர், என்.டி.ஆரின் காலம் வேறு தற்போதைய காலம் வேறு சினிமாவில் கிடைக்கும் பிரபலம் அரசியலுக்கு உதவாது.
என பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் பிரகாஷ்ராஜை சொல்வது உண்மைதான் சினிமா போல அரசியல் இருக்காது அதில் பல மாற்றங்கள் நாம் செய்ய வேண்டியதாக இருக்கும் அதற்கு ஏற்ற போல் நாம் மாற வேண்டியதாகவும் இருக்கும் எனக்கூறி கமெண்ட் அடித்து இந்த செய்தியை பரப்பி வருகின்றனர்.