குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்து பின் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சிம்பு இவர் திரை உலகில் பன்முக தன்மை கொண்ட ஒரு ஹீரோவாக இருக்கிறார் இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள் ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறுகின்றன.
அந்த வகையில் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்பு நடித்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு.இந்த படம் அண்மையில் திரையரங்கில் வெளி வந்து நல்ல விமர்சனத்தை பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது இந்த படத்தில் சிம்புவின் மாறுபட்ட நடிப்பு மற்றும் உடல் எடையை குறைத்து நடித்தது இந்த படத்திற்கு பிளஸ்ஸாக அமைந்துள்ளது.
இந்த படத்தில் அவருடன் கைகோர்த்து ராதிகா சரத்குமார், kayadu lohar, neeraj madhav மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் மட்டுமே 25 கோடி வசூலித்துள்ளது வருகின்ற நாட்களிலும் நல்ல வசூலை அள்ளும் என கணிக்கப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு..
சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால் நான் காட்டுப் பசியில் இருக்கிறேன். அதனால் திரைப்படங்களின் கதைகளை கவனமாக பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறேன் நிறைய கதைகள் வருகின்றன ஆனாலும் என்னுடைய காட்டு பசிக்கு தீனி போடும் கதையை மட்டுமே எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் என கூறினார்.
தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்கள் கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பும் எனக்கு இருக்கிறது ஆரம்ப காலகட்டத்தில் என்னிடம் ஒரு வேகம் இருந்தது அதனால் படங்களை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு அப்பொழுது இல்லை தற்பொழுது தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் படங்களை கொடுக்க வேண்டும் என்ற பொறுப்பு எனக்கு வந்திருப்பதாக கூறினார்..