சினிமாவை பொருத்தவரை நடிகைகளுக்கு பாதுகாப்பு என்பது முழுமையாக இருப்பதாக கூற முடியாது மேலும் ஏராளமான நடிகைகள் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை தேடினாலும் கூட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என சிலர் அவர்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். எனவே நடிகைகள் பலரும் சினிமாவில் பெரிதாக பாதுகாப்பு இல்லை என கூறி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் மலையாளத்தில் இருந்து தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகை மோனிஷா இது பற்றிய கூறிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரண்மனைக்கிளி சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இதில் மீனாட்சி மருமகளாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.
இந்த சீரியலினை தொடர்ந்து மிர்ச்சி செந்தில் நடிப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் ரக்ஷிதா மகாலட்சுமி நடித்து வந்தார் இவர் விலகிய காரணத்தினால் மொனிஷாவிற்கு அதில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சில மாதங்களுக்கு நிறைவு பெற்ற நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பச்சைக்கிளி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
சமீப பேட்டி ஒன்றில் மோனிஷா இதுவரை நடித்த சீரியல்களிலேயே அவருக்கு மிகவும் மனதை தொட்ட மிகவும் பிடித்த சீரியல் இதுதான் என்று கூறியுள்ளார். மேலும் இதனை தொடர்ந்து மலையாள நடிகையான இவர் மலையாள ரசிகர்களை விட தமிழ் சீரியல்களில் நடிப்பதன் மூலம் கிடைத்த ரசிகர்களிடம் தான் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ஏனென்றால் இவர் மலையாள சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது அடிக்கடி தவறான போன் கால் வருமா இதனால் அவர் பலமுறை மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாகவும் குடும்பத்தினர்களும் இவர் சினிமாவில் நடிப்பதால் தான் இவ்வளவு பிரச்சனை ஏற்படுகிறது எனவும் கூறினார்களாம் இதன் காரணமாக தான் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிம் தொடர்ந்து அடுத்தடுத்து சீரியல்களில் நடித்து வருகிறேன்.மேலும் ஒரு முறை கூட அதுபோன்று எந்த ஒரு போன் காலும் வரவில்லை என்று தமிழ் ரசிகர்களை பெருமையாக பேசி உள்ள இவருடைய பேட்டி இணையதளத்தில் வைரலாகி வருகிறது.