தமிழ் சினிமாவில் ஜீவா நடிப்பில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் என்ற திரைப்படத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான கதாநாயகி தான் நடிகை சமந்தா. இவ்வாறு வெளிவந்த இத்திரைப்படம் நல்ல காதல் திரைப்படமாக அமைந்தது தான் காரணமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
மேலும் இத்திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை அதன்பிறகு தான் கால்வைத்த இடமெல்லாம் வெற்றியை பதிக்க ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்போது சமந்தா தமிழ் சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் நமது நடிகை தமிழில் கடைசியாக சூப்பர் டீலக்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இத்தகைய படம் வெளியாக உள்ள நிலையில் நயன்தாராவின் ஆசைக் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காற்றுவாக்கில் இரண்டு காதல் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் சமந்தாவின் நடிப்பில் வெளியான தி பேமிலி மேன் 2 என்ற வெப் தொடரானது மிகவும் மாறுபட்ட கதாபாத்திரமாக அமைந்தது அந்த வகையில் நடிகை சமந்தா நடித்த கதாபாத்திரத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்திருந்த நிலையில் பலர் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தார்கள்.
இந்நிலையில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி நடிகை சமந்தா மனம் திறந்து பேசியது மட்டுமில்லாமல் ஒரு நடிகையாக நான் பிரபலமில்லாத கதாபாத்திரங்களை தேடி நடித்தது எனக்கு மிகவும் பிடித்த விஷயமாக அமைந்தது என்று கூறியுள்ளார்.
அப்படித்தான் இந்த தீ பேமிலி மேன் 2 தொடரில் நடிக்கும் பொழுது எனக்கு நல்ல சவாலாக இருந்தது மட்டுமில்லாமல் பல வாய்ப்புகளை எனக்கு கிடைப்பதற்கு இது உறுதுணையாக இருந்தது என கூறியுள்ளார்.