நான் இந்த ஒரே காரணத்தினால் தான் புடவை கட்டுகிறேன்..! ரகசியத்தை வெளியிட்ட சாய் பல்லவி..!

sai-pallavi-2
sai-pallavi-2

மலையாள சினிமாவில் வெளிவந்த பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம்  ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சாய் பல்லவி இவரை சாய்பல்லவி என ரசிகர்கள் அழைப்பதை காட்டிலும் மலர் டீச்சர் என்று கொண்டாடி வருவது ரசிகர்களுக்கு பிடிக்கும்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சார பார்வை மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்த நமது நடிகை எப்பொழுதும் சாதாரணமான தோற்றத்தில் மட்டுமே  திரைப்படங்களில் நடிப்பதை கவனமாக வைத்துள்ளார் அதுமட்டுமில்லாமல் இதன் காரணமாகவே இவரை பலருக்கும் பிடித்து போய்விட்டது.

மேலும் நடிகை சாய் பல்லவி சமீபத்தில் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டும் இன்றி தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்து வருவது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்நிலையில் சமீபத்தில் கார்கி என்ற திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த திரைப்படம் ஜூலை மாதம் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளார்கள்.

பொதுவாக நடிகை சாய் பல்லவி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி திரைப்படங்களிலும் சரி பெரும் அளவு புடவை மட்டுமே அணிந்து வருகிறார் அந்த வகையில் இதற்கான காரணத்தை தற்பொழுது சாய் பல்லவி அவர்கள் கூறியுள்ளார். அந்த வகையில் நான் கல்லூரியில் நடனம் ஆடும் பொழுது கொஞ்சம் கம்பட்டபிளாக இருக்க வேண்டும் என ஓபன் ஆன உடைகளை அணிந்து உள்ளேன்.

ஆனால் பிரேமம் திரைப்படம் வெளிவந்த பிறகு பலரும் என்னை விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் அன்றிலிருந்து நான் புடவை அணிவதை சௌகரியமாக உணர ஆரம்பித்து விட்டேன். ஆனால் வருங்காலத்தில் என் பிள்ளைகளுக்கு நான் உடைகளில் சுதந்திரத்தை கொடுப்பேன் என சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

sai-pallavi-2
sai-pallavi-2