இந்த இடத்தில் நான் தான் ராணி..! ரஜினியை நோஸ்கட் பண்ணிய மீனா..!

rajini-meena
rajini-meena

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வரை பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மீனா. இவர் பிரபலமான நமது நடிகை சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

இவ்வாறு இவர் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இவருக்கு பெயரும் புகழும் உண்டானது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த படவாய்ப்புகளும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தமிழ் சினிமாவில் சிறந்த கண்ணழகி என பெயர் எடுத்து விட்டார்.

அந்த வகையில் தன்னுடைய நடிப்பிலும் அதிக அளவு கவனம் செலுத்த நமது நடிகை எங்கேயோ கேட்ட குரல் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக ரஜினியுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார் இந்த திரைப்படத்தில் அம்பிகா ராதா ஆகியோர்கள் நடித்திருப்பார்கள்.

அதேபோல ரஜினி மீனா நடிப்பில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த திரைப்படம் என்னவென்றால் அன்புள்ள ரஜினி என்ற திரைப்படம் தான் இதில் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ஊனமுற்ற குழந்தையாக நடித்திருப்பார்.  பின்னர் வளர்ந்து அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜோடி போடும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

meena-1
meena-1

அந்த வகையில் பல மெகா ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த நமது நடிகை ரஜினியுடன் ஜோடி போட்டு நடிப்பதற்கு முன்பாகவே ஆந்திராவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்நிலையில் ரஜினியுடன் முதன்முதலாக ஜோடி சேரும் திரைப்பட படபிடிப்பின் பொழுது  ராஜா மந்திரி என்ற இடத்தில் ஆந்திராவில் எடுக்கப்பட்டது.

ஆனால் அந்த இடத்தில் மீனா ஏற்கனவே பல ஆந்திரா திரைப்படங்களை நடித்ததன் காரணமாக அங்கு மீனாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள்.  அப்போது மீனாவுக்கு பலரும் கூச்சம் போட்டது ரஜினிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

meena-2
meena-2

அதேபோல படப்பிடிப்பு முடிந்தவுடன் ரயிலில் அனைத்து பிரபலங்களும் ஊருக்கு செல்ல நேரிட்ட போது மீனாவை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக அலைமோதி இருந்தார்கள் இதனை பார்த்தவுடன் ரஜினி நீங்கள் இங்கு அவ்வளவு பிரபலமா என்னால நம்பவே முடியவில்லை என்று கூறியது தமட்டுமில்லாமல் வாழ்த்துக்கள் மீனா என ரஜினி கூறியுள்ளார்.