கிராமத்து கதையில் நான் தான் கிங் என நிரூபித்த சரத்குமாரின் 5 படங்கள்

sarathkumar
sarathkumar

sarathkumar : தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்து இன்றுவரை ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் சரத்குமார் இவர்  திரையுலகில் முதலில் வில்லனாக மிரட்டினார் பின் ஹீரோ வாய்ப்பு மெல்ல மெல்ல வர ஆரம்பித்தது நல்ல கதை அம்சம் உள்ள படங்களில் நடித்து ரஜினி, விஜயகாந்த், கமல் நடிகர்களுக்கு இணையாக சரத்குமார் ஓடினார்.

1990 to 2000 ஆம் ஆண்டு சரத்குமாருக்கு மிக முக்கியமான ஆண்டாக ஆம் அவர் தொட்ட எல்லா படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குறிப்பாக கிராமத்து  மனம் வீசும் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளினார். அப்படி சரத்குமார் கேரியரில் இன்றுவரை பேசும் 5 கிராம படங்கள் பற்றி பார்ப்போம்..

1. நாட்டாமை : கே எஸ் ரவிக்குமாரும், சரத்குமாரும் இணைந்த படங்கள் அனைத்துமே வெற்றி படங்கள்தான். அந்த வகையில் 1999 ஆம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியான திரைப்படம் “நாட்டாமை”. இந்த படம் முழுக்க முழுக்க.. ஒரு கிராமத்தையே கட்டி ஆளுவார் சரத்குமார்.

அனால் குடும்ப பிரச்சனையை பல ஏற்படும் இதிலிருந்து எப்படி தனது குடும்பத்தை மீட்டெடுக்கிறார் என்பதுதான் படத்தின் கதை படத்தில் சரத்குமார் உடன் இணைந்து மீனா, குஷ்பூ மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருப்பார்கள் படம் வெளிவந்து 175 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றி பெற்றது.

2.  சமுத்திரம் : கே எஸ் ரவிக்குமார், சரத்குமார் கூட்டணியில் மீண்டும் உருவான ஒரு திரைப்படம் தான் சமுத்திரம் இந்த படம் நான்கு அண்ணன்கள் தனது தங்கையின் மீதுள்ள பாசத்தை வெளிப்படுத்தும் படமாக இது அமைந்திருக்கும் படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தன இந்த படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தது.

3. சூரியவம்சம் : விக்ரமன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சூரியவம்சம். படத்தில் சரத்குமார் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் சரத்குமார் உடன் இணைந்து தேவயாணி, ராதிகா மற்றும் பலர் நடித்திருப்பார்கள் தந்தை மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்.

பின் தனது சொந்த உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து தனது  எ அப்பாவின் மானத்தை காப்பாற்றுவதோடு நல்ல பெயரையும் எடுத்திருப்பார். இந்த படம் சரத்குமார் கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.

4. நட்புக்காக : 1998 – ல் உருவான இந்த திரைப்படம்.. நட்பை மையமாக வைத்து உருவாகியது படத்தில் விஜயகுமார், சரத்குமார் நட்பு பலரையும் கவர்ந்து விட்டது படம் வெளிவந்து பெரிய வெற்றியை பதிவு செய்தவர் மட்டுமல்லாமல் சரத்குமாரின் 75வது படமாக இந்த படம் அமைந்தது.

5. பாட்டாளி : இந்த படத்தில் சரத்குமார் தேவயானி, ரம்யா கிருஷ்ணன் இரண்டு பேரையுமே திருமணம் செய்து கொள்வார், கடைசியில் தேவயானி உடன் இணைந்தாரா இல்லையா என்பது தான் படத்தின் கதை படத்தில் காமெடி, சென்டிமென்ட்  பெரிய அளவில் கை கொடுத்ததால் இந்த படம் இப்ப சொல்லு ரீதியாக வெற்றி பெற்றது.