ajith : அஜித்துக்கு விசில் அடிக்க கத்து கொடுத்தே நான் தான் பெருமையாக பீத்திக் கொள்ளும் பிரபல நடிகர்

ajith next movie director
ajith next movie director

ajith : தமிழ் சினிமாவில் காமெடியன்னாக ஓடிக்கொண்டிருப்பவர் ரோபோ சங்கர். இவர் முதலில் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு போன்ற பல ரியாலிட்டி ஷோக்களில்  கலந்து கொண்டு பிரபலமடைந்தார் பிறகு வெள்ளித்திரையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான அஜித், தனுஷ் போன்ற நடிகரின் படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

இப்படிப்பட்ட ரோபோ ஷங்கருக்கு மது, புகை போன்ற பழக்கங்கள் இருந்தன இதனால் ரொம்ப பாதிக்கப்பட்ட ஷங்கருக்கு உடல் எடை குறைந்தது தற்பொழுது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார். இந்த நிலையில் ரோபோ சங்கர் அஜித் குறித்தும் கமல் குறித்தும் ஒரு பேட்டில் வெளிப்படையாக பேசிய உள்ளார்.

அஜித்தின் விசுவாசம் படத்தில் நடித்திருந்தேன் அப்பொழுது எனக்கும் அஜித்திற்கும் நல்ல பழக்கம் ஏற்பட்டது ஒரு தடவை எனது மனைவி மகள் அஜித்தை பார்க்க வந்தனர் ஆனால் அஜித் இரண்டு நாட்கள் அந்த கெட்டப்பில் நடித்துக் கொண்டிருந்ததால் புகைப்படம் எடுக்க முடியாமல் போனது. விசுவாசம் படத்தின் இறுதி கட்ட ஷூட்டிங் எட்டிய பொழுது மீண்டும் எனது குடும்பம் அஜித்தை சந்தித்தது.

அப்பொழுது அஜித் கெட்டப்பை கலைத்துவிட்டு வந்து எங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் என கூறினார் மேலும் பேசிய ரோபோ சங்கர் அஜித்துக்கு விசில் அடிக்க தெரியாது நான் கற்றுக் கொடுத்தேன் அதன் பிறகு அவர்  விசில் அடித்தார். ஆள் பார்ப்பதற்கு நல்ல கலராக இருந்ததால் அவர் விசில் அடித்து விசில் அடித்து அவரது கன்னம் வீங்கி விட்டது என கூறினார்.

பிறகு கமல் பற்றி ரோபோ சங்கர் சொன்னது என்னவென்றால்.. உலகநாயகன் எனக்கு முத்தம் கொடுத்தது போன்ற ஒரு புகைப்படம் இருக்கும் ஆண்களுக்கு முத்தம் கொடுத்ததில் கமல் எனக்கு தான் முதலில் முத்தம் கொடுத்தார் என கூறினார். அதன் பிறகு விஜய் சேதுபதி, அனிருத், லோகேஷ் போன்றவர்களுக்கு கொடுத்ததாக கூறினார்.