தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சினிமா உலகில் பல வெற்றிகளை குவித்துள்ளார் இப்பொழுதும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி சினிமாவில் பெரிய உயரத்தை தொட்டாலும் வாழ்க்கையில் தற்போது மன உளைச்சலில் இருந்து வருகிறார். காரணம் குடும்ப பிரச்சனைகள் என சொல்லப்படுகிறது.
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு அண்மையில் விவாகரத்தை பெற்று பிரிவதாக சொல்லி இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர் ஏற்கனவே இருக்கிற பிரச்சினை போதாது என ரஜினிக்கு இது ஒரு புதிய பிரச்சினையாக கிளம்பியது.
இப்படி இருக்கின்ற நிலையில் சென்னையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மேடைப்பேச்சு ஒன்றில் சில விஷயங்களை வெளிப்படையாக பேசி இருந்தார் அதில் அவர் சொன்னது என்னிடம் பணம் புகழ்பெயர் என அனைத்தும் அதிகமாக இருக்கிறது ஆனால் என் வாழ்க்கையில் 10% கூட நிம்மதி இல்லை, சந்தோஷம் இல்லை என கூறிப்பேசினார்.
இது அங்கிருந்த பலரையும் கண்கலங்க வைத்தது இதனை அறிந்து கொண்ட நடிகர் தனுஷ் ரஜினியின் மன கஷ்டத்திற்கு தானும் ஒரு காரணம் என கூறி புலம்பி வருகிறாராம். என்னுடைய மனைவி ஐஸ்வர்யாவுடன் நான் சற்று கொஞ்சம் பொறுமையாக இருந்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டெடுக்கணுமே தவிர நானும் கோபப்பட்டு பிரிந்திருக்கக் கூடாது என நினைத்து புலம்பி வருகிறாராம்.
இதிலிருந்து ரஜினி மீண்டும் வர ஐஸ்வர்யாவுடன் சேருவது தான் வழி என தெரிந்து அவருடன் சேருவதற்கான பேச்சு வார்த்தைகளில் இறங்கி உள்ளார் தனுஷ். மேலும் ஐஸ்வர்யா தனுஷுடன் செய்து இணைவது பற்றி தனுஷின் பிறந்தநாள் அன்று தெள்ளத் தெளிவாக தெரிந்து விடும் என சொல்லப்படுகிறது.