தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர்கள் அஜித் விஜய். இவர்களது திரைப்படங்கள் வெளி வருகிறது என்றாலே ரசிகர்கள் அதனை ஆரவாரத்துடன் வரவேற்பார்கள் அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று வருகின்றனர்.
அந்தவகையில் நடிகர் அஜித் மற்றும் விஜய் இருவரும் வருடத்திற்கு ஒரு தரமான படத்தைக் கொடுத்து ஓடுகின்றன. அப்படி விஜய் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தாலும் நல்ல வசூலை பெற்று ஓடியது இதனை தொடர்ந்து விஜய்.
தற்போது தனது 66வது திரைப்படத்தில் இயக்குனர் வம்சி உடன் இணைந்து நடித்து வருகிறார் இந்த படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் தில் ராஜு தயாரித்து வருகிறார் மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. விஜயை தொடர்ந்து அஜித்தின் வலிமை திரைப்படமும் கடைசியாக வெளிவந்து மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் தற்போது தனது 61வது திரைப்படத்தில் ஹெச் வினோத் உடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக கைகோர்த்து நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகின்ற நிலையில் படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு ரெடியாக உள்ளது.
இந்தநிலையில் தயாரிப்பாளரும் இயக்குனரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் அஜித் விஜய் கால்ஷீட் கிடைத்தால் 200 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்க நான் தயாராக உள்ளேன் என தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் பேசியுள்ளார். மேலும் நடிகர் ஆர்கே சுரேஷ் அஜித்தின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.