விஜய் அஜித்தை இணைத்து இயக்குவதற்கு நான் ரெடி.! ஆனால் அவர்கள் ஓகே சொல்லணும் பிரபல இயக்குனர் அதிரடி

vijay-ajith
vijay-ajith

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக விளங்குபவர்கள் அஜித் குமார் மற்றும் விஜய். இதில் அஜித் அவர்கள் தற்போது ஏ கே 61 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் இறுதி கட்டப்படவடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது இந்த படத்தை ஹெச் வினோத் அவர்கள் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது அதனை தொடர்ந்து தளபதி 67வது திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைய உள்ளார்.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் கேட்டபோது  எப்போது மங்கத்தா 2 வெளியாகும் விஜய் அஜித் கூட்டணி அதில் பார்க்க முடியுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். ஏற்கனவே 1995ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர் இவர்கள் மீண்டும் எப்போது இணைய உள்ளார்கள் என்று தமிழ் சினிமாவில் மிகப்பெரிய  எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந்த நிலையில் அந்த ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ஆசால்டாக பதில் அளித்து உள்ளார் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் மங்காத்தா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது அதனை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டபோது எனக்கும் ஆசையா தான் இருக்கு அதில் அஜித் விஜய் திரையில் காண நான் மிகவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இதற்கு காலம் அமைய வேண்டும் இதைப் பற்றி அவர்கள் இருவரிடமும் பலமுறை கூறியிருக்கிறேன் அவர்களும் அந்த ஆசை இருக்கிறது என்று கூறியுள்ளனர் அது எப்போது நிறைவேறும் என்பது என்று தெரியவில்லை.

அப்புறம் இவர்கள் இருவரும் ஒப்புக்கொண்டால் மங்காத்தா 2 படத்தை பெரிய அளவில் எடுத்து விடலாம் என்று கூறியுள்ளார். இதனால் விஜய் அஜித் ரசிகர்கள் எப்போது இணைவார்கள் என எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.