“காதல் கொண்டேன்” திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தமிழில் ஆரம்பித்தவர் நடிகை சோனியா அகர்வால். இப்படத்தை செல்வராகவன் இயக்கி இருந்தார் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சோனியாஅகர்வால்.
சிறந்த நடிகை என ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் உயர்த்தி கொண்டார். ஒரு கட்டத்தில் சோனியா அகர்வாலும் இயக்குனர் செல்வராகவனும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் இவர்களது வாழ்க்கை நீண்ட வருடங்கள் நீடிக்கவில்லை. இருவருக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் வந்ததால் விவாகரத்து பெற்று பிரிந்தனர் அதன் பிறகு இயக்குனர் செல்வராகவன் தன்னுடன் பணியாற்றிய கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் தற்போது மூன்று குழந்தைகள் இருக்கின்றன.
மறுபக்கம் சோனியா அகர்வால் சீரியல் மற்றும் சினிமாக்களில் வரும் வாய்ப்புகளை பெற்று நடித்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சோனியா அகர்வாலுக்கு புதிய பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கி உள்ளன. இந்த சமயத்தில் அவர் சில பற்றி பேசி உள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது தற்போது நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முயற்சி செய்கிறேன். நல்ல கதை உள்ள படங்கள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என கூறினார்.
மேலும் சோனியா அகர்வால் வெளிபடையாக சொன்னது. தனுஷுடன் நடிக்க தயார், அவரது அண்ணன் செல்வராகவன்னுடன் நடிக்க தயார். செல்வராகவன் சினிமாவில் பணியாற்றும் போது அவரது கடின உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும் இன்னும் நான் செல்வராகவனுடன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் நல்ல நண்பர்களாக என கூறினார். எனக்கும் செல்வராகவன்னுக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது நல்ல கதைகள் அமைந்தால் அவருடன் இணைந்து பணியாற்றுவேன் என தெரிவித்தார்.