தற்போது தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வருகிறது. மாஸ்டர் திரைப்படம் தற்பொழுது வரையிலும் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் இதனைத் தொடர்ந்து தளபதி விஜயின் 65-வது படத்தைப் பற்றி ஏதாவது அப்டேட் வருமா என்று ரசிகர்கள் வழிமேல் விழி வைத்து காத்து வருகிறார்கள். இப்படத்தைப் பற்றி இன்று வரையிலும் எந்த அப்டேட்டும் வரவில்லை.
அந்த வகையில் தற்பொழுது விஜய்யின் 65ஆவது திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அவர் இல்லையாம் வேறு ஒரு நடிகையை படக்குழுவினர்கள் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார்களாம்.
இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. இந்நிலையில் ரசிகர்கள் இப்படம் மிகவும் ஆக்ஷன் படமாக இருக்குமா இல்லை அரசியல் படமாக இருக்குமா என்று இணையதளத்தில் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தளபதி விஜயின் 65-ஆவது திரைப்படத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை பூஜா ஹெக்டே மூன்றரை கோடி சம்பளத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளாராம். இவர் தமிழில் ஜீவா நடிப்பில் வெளிவந்த முகமூடி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்.
ஆனால் இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைய காரணத்தினால் தெலுங்கில் தனது ஆர்வத்தை செலுத்தி வந்தார்.தற்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் நடிப்பில் வெளிவந்த புட்டபொம்மா பாடலின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமடைந்தார்.