மலையாளத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பிரேமம் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை சாய் பல்லவி. இவ்வாறு பிரபலமான நடிகை இந்த திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தது இன்றும் ரசிகர்களால் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நடிகை சாய் பல்லவி தியா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். நாளை திரைப்படம் அவருக்கு சொல்லும்படி வெற்றியை கொடுக்கவில்லை அதன்பிறகு தனுஷுடன் நடித்த மாரி 2 திரைப்படம் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார்.
மேலும் நடிகை சாய்பல்லவி தெலுங்கில் பல மெகா ஹிட் திரைப்படங்களை நடித்ததன் காரணமாக தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவர் நடிப்பில் மட்டும் சிறந்தவர் கிடையாது நடனத்திலும் கூட. அந்த வகையில் இவர் எளிதில் ரசிகர்களை கவர்ந்து விட்டார்.
நடிகை சாய் பல்லவி மிடில் கிளாஸ் அப்பாயி வெற்றியை தொடர்ந்து தற்போது நானி உடன் இணைந்து சியாம் சிங்கார ராய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது வெளியாக ரெடியாக உள்ளது.
அதுமட்டுமில்லாமல் தற்போது நடிகை சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் ராணாவுடன் விராட பருவம் மற்றும் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி ஆகிய இரண்டு திரைப்படங்களும் உருவாகிவருகிறது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் பவன் கல்யாணுடன் ஒரு திரைப்படத்தில் சாய்பல்லவி நடிக்க உள்ளாராம்.
இவ்வாறு தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் மாஸ் காட்டி வரும் நடிகை சாய் பல்லவி பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க நான் தயார் என்று கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் கதை அவருக்கு பிடித்தால் மட்டுமே திரை படத்தில் நடிப்பேன் என கூறியுள்ளாராம்.