அடுத்த கல்யாணத்துக்கு நான் ரெடி.! ஆனால் ஒரு கண்டிஷன்- திருமணப் பெண்ணுக்கு வச்ச ட்விஸ்ட் .

d imaan
d imaan

தமிழ் சினிமா உலகில் ரஜினி அஜித் போன்ற டாப் நடிகர்கள் படங்களுக்கு இசையமைத்து வலம் வருபவர் டி இமான். இவர் பெரும்பாலும் கிராமத்து சாயலில் இருக்கும் படங்களுக்கு சிறப்பாக இசை அமைப்பதில் இவர் கைதேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் கண்ணனே கண்ணே பாடலுக்கு சிறப்பாக இசையமைத்து தேசிய விருதை பெற்றார்.

அதனை தொடர்ந்து ரஜினியின் அண்ணாத்த திரைப்படத்திலும் இவர் இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. சினிமாவுலகில் தொட்ட எல்லாத்திலும் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் இசையமைப்பாளர் டி இமான்னுக்கு ஆனால் நிஜ வாழ்க்கையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

2008ஆம் ஆண்டு டி இமான் மோனிகா ரிச்செட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இரு பெண்குழந்தைகள் என நன்றாகத் தான் வாழ்க்கை போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சமீபத்தில் பிரிந்தனர்.

இதனையடுத்து உடனடியாக அடுத்ததாக ஒரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் அண்மையில் வெளிவந்த நிலையில் தற்போது அந்த பெண்னை கல்யாணம் செய்வதற்கு முன்பாக ஒரு கண்டிஷன் போட்டுள்ளார். அதாவது எனக்கு வரவேண்டிய பெண் விவாகரத்து பெற்றவர் ஆகவோ அல்லது விதவைப் பெண்ணாகவே இருக்க வேண்டும் .

அதே சமயம் குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். முதல் திருமணம் விவாகரத்து பெற்று முடிந்த நிலையில் இரண்டாவது திருமணம் அதுபோல் விவாகரத்து பெறாமல் இருக்க இத்தகைய முடிவுகளை யோசித்து எடுத்துள்ளார் டி இமான்.